For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திரும்பத் திரும்ப அதையே பேசறீங்களே... கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: தொடர்ந்து தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘பா.ஜ.க மற்றும் காங்கிரசாரிடம் பணம் வாங்கிக்கொண்டு ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடுங்கள்' எனப் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது.

இதுதொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக புகார் அளிக்கப் பட்டது. அதன்பேரில், கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.

Election Commission directs Kejriwal not to ask voters to take bribe

ஆனபோதும், தொடர்ந்து அவர் அதேபாணியில் பிரச்சாரம் செய்து வருகிறார். எனவே, தேர்தல் ஆணையமும் தொடர்ந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட உத்தரவில், ‘தேர்தல் விதிமீறலில் ஈடுபடுவதை கைவிடுமாறு கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டுள்ளது. இனிமேலும் விதிமீறலில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்' என்றும் எச்சரித்துள்ளது.

English summary
Four days after it censured Aam Aadmi Party leader Arvind Kejriwal for violation of the Model Code of Conduct and asked him to be more circumspect in his public utterances, the Election Commission on Tuesday told him to “desist” from making such statements, failing which it would be “constrained to take stern action” against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X