For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவினருக்கு வந்தா அது ரத்தம்.. மத்தவங்களுக்கு வந்தா..?

Google Oneindia Tamil News

மும்பை: மறுபடியும் ஒரு விஐபி விமான சர்ச்சை பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பயணம் செய்த விமானம், அவரால் தாமதம் செய்யப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. ஆனாம் விமான தாமதத்திற்குத் தான் காரணமல்ல என்று பட்னாவிஸ் கூறியுள்ளார்.

சமீபத்தில்தான் லே நகரிலிருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம் மத்திய அமைச்சரால் தாமதம் செய்யப்பட்டதாகவும், 3 பயணிகள் கீழே இறக்க விடப்பட்டதாகவும் சர்ச்சை ஏற்பட்டது என்பது நினைவிருக்லாம்.

இந்த நிலையில் ஏர் இந்தியாவை வைத்து மீண்டும் ஒரு சர்ச்சை வந்துள்ளது. இந்த முறை சிக்கியிருப்பவர் மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ். அமெரிக்கா சென்றுள்ள அவர் புறப்படுவதற்கு முன்பு தனது முதன்மைச் செயலாளருக்காக விமானத்தை நிறுத்தி வைத்து தாமதம் செய்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இதை பட்னாவிஸ் மறுத்துள்ளார்.

'Enough is Enough', says Fadnavis as row over flight delay escalates

ஒரு வார காலமாக பயணமாக அமெரிக்கா போயுள்ளார் பட்வானிஸ். முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயண் இது. அங்கு மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்யா நாடெல்லாவை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த நிலையில் மும்பையிலிருந்து அவர் சென்ற விமானம் தாமதமாகக் கிளம்பியது ஏன் என்ற சர்ச்சை வெடித்துள்ளது. மகாராஷ்டிர அரசின் முதன்மைச் செயலாளர் வருவதற்குத் தாமதமானதால், விமானத்தை நிறுத்தி வைக்குமாறு பட்னாவிஸ் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இதை பட்னாவிஸும், அவருடன் பயணித்த 2 பயணிகளும் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக பட்னாவிஸ் டிவிட்டரில் குமுறியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவிட்டுகளில் கூறியிருப்பதாவது:

"என்னால் விமானம் தாமதமானதாக கூறப்படுவதை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். நான் விமானத்தில் ஏற்கனவே ஏறி அமர்ந்து விட்டேன். பிறகு எப்படி நான் தாமதப்படுத்த முடியும்?

எனது குழுவினர் இல்லாமல் நான் போக மாட்டேன் என்று கூறவே இல்லை. அப்படி யாராவது கூறினால் அது பொய்யாகும்.

எனக்குப் பின்னால் இருந்த, என் பக்கத்தில் இருந்த பயணிகளே நான் எதுவும் தலையிடவி்ல்லை என்று கூறியுள்ளனர். நான் அமைதியாக அமர்ந்திருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதுவே சாட்சியாகும்.

நான் ஊரிலிருந்து திரும்பி வந்ததும் குற்றவியல் அவதூறு வழக்கு தொடருவேன் என்று கூறியுள்ளார் பட்னாவிஸ்.

பட்னாவிஸுக்கு ஆதரவாக இரண்டு பயணிகளும் டிவிட் செய்துள்ளனர். அதை பட்னாவிஸ் ரீட்வீட் செய்துள்ளார்.

எல்லாம் சரி இதுவே ஒரு காங்கிரஸ் முதல்வர் பயணம் செய்த விமானம் தாமதமாகியிருந்தால் போட்டுத் தாளித்திருக்க மாட்டார்கள் பாஜகவினர்...?

English summary
Aggrieved by reports that he delayed an Air India flight to the United States for his Principal Secretary, Maharashtra Chief Minister Devendra Fadnavis lashed out on twitter saying "Enough is enough!".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X