For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

11 வயதிலிருந்து “விஸ்கி” குடித்த தாத்தா 111 வயதில் மரணம் - கொண்டாட்டத்தில் உறவினர்கள்!

Google Oneindia Tamil News

ஜலந்தர்: பஞ்சாப்பினை சேர்ந்த 111 வயதான தாத்தா ஒருவர் தனது கிராமத்தில் காலமானார். இவர் தன்னுடைய 11வது வயதிலிருந்து மது அருந்தி வந்தவர். ஆனாலும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்துள்ளார்.

ஐரோப்பாவில் வசித்து வந்தவர் இறந்து போன தாத்தாவான நாசர் சிங் கில்.

இவர் சமீபத்தில் ஜலந்தரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பசல்பூர் என்ற தனது சொந்த கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் தனது 111 வது வயது பிறந்த நாளை கொண்டாடினார். பிறகு 2 வாரத்தில் உயிரிழந்துள்ளார்.

Europe's oldest man Nazar Singh Gill dies aged 111 in Jalandhar

வயதான மனிதர்:

ஐரோப்பாவின் மிகவும் வயதான மனிதாராக கருதப்படுபவர் நாசர் சிங் கில். இங்கிலாந்தில் வசித்து வந்த இவர் 50 ஆண்டுகளுக்கு முன் 1963 ஆம் ஆண்டு தனது சொந்த கிராமத்திற்கு திரும்பி விவசாயம் செய்து தனது குடும்பத்துடம் வாழ்ந்து வந்தார்.

பிறந்தநாளும், இறந்த நாளும்:

கடந்த ஜூன் 8 ந்தேதி அவரது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். பிறந்த 13 நாட்களுக்கு பிறகு ஜூன் 21 ஆம் தேதி நாசர் சிங் காலமானார்.

இன்று இறுதிச் சடங்கு:

இவரது ரத்த சொந்தங்கள் வரும் வரையில் இன்று வரை அவரது உடல் நகோடர் அரசு மருத்துவமனை பிண அறையில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது.

அமைதியான மரணம்:

இது குறித்து அவரது 71 வயதான மூத்த மகன் கர்தார் சிங் கில் கூறும் போது, "அவர் மிகவும் அமைதியான முறையில் தூங்குவது போல் மரணமடைந்து உள்ளார். நாங்கள் அவரை இழந்து உள்ளோம். நாங்கள் அவரது இறப்பை கொண்டாட உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

ஹப்பா 63 கொள்ளுப் பேரன்கள்:

நாசர் சிங் கில்லுக்கு 9 குழந்தைகள். 3 மகள்கள், 6 மகன்கள். இவர்களுக்கு பிறந்தவர்கள் 34 பேரக்குழந்தைகள்...இவர்களுக்கு பிறந்தவர்கள் 63 கொள்ளு பேரன்கள் ஆவார்கள்.

கொண்டாடும் குடும்பத்தினர்:

நாசர் சிங் இறந்ததை அவரது குடும்பம் அதை மிக சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறது அதுதான் விசேஷம். தினமும் பாரம்பரிய பஞ்சாப் உணவு வகைகளுடன், விலை கூடிய பாதாம் பருப்பு,முந்திரி பருப்பு,பிஸ்தா மற்றும் உலர் திராட்சை, வால்நட்ஸ்,பாதாம் எண்ணெய் என உயர் வகையான உணவுப்பொருட்களுடன் விருந்து நடைபெறுகிறது. விருந்தில் மது வகைகளும் பரிமாறப்படுகிறது.

விஸ்கி தாத்தா:

இது குறித்து கர்தார் சிங் கில் கூறும் போது, "எனது தந்தை தான் இறக்கும் வரை தினமும் விஸ்கி அருந்தினார்.எங்கள் தந்தை உடல் ஆரோக்கியமுடன் வாழ்ந்தது எங்களுக்கு அதிர்ஷடம். அவர் மிக நன்றாக சாப்பிடுவார் ஆனால் புகை பிடிக்க மாட்டார்" என்று கூறினார்.

மனுஷன் வாழ்ந்திருக்கார்ப்பா!!

English summary
Europe's oldest man Nazar Singh Gill, aged 111 years, died of two consecutive heart attacks in his native Fazilpur village in Jalandhar district on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X