For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் ஒரு 'அவுட்டேஜ்'.. ஸ்தம்பித்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம்... இப்போ ஓகே!

Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் முழுவதும் பல பகுதிகளிலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் திடீரென செயலிழந்து பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இவை சிறிது நேரம் ஸ்தம்பித்துப் போய் விட்டனவாம்.

இதுகுறித்து டிவிட்டரில் விதம் விதமான தகவல்கள் பறந்து கொண்டுள்ளன. உலகின் பெரும்பாலான பகுதிகளில் பேஸ்புக் செயல்படவில்லை. அதேபோல இன்ஸ்டாகிராமும் ஸ்தம்பித்தது. மொபைல்களிலும் கூட இவற்றைப் பார்க்க முடியவில்லை..

Facebook and Instagram are down right now

அதேசமயம், வாட்ஸ் ஆப் செயல்பட்டு வந்தது.

கடந்த செப்டம்பர் மாதமும் இப்படித்தான் 2 முறை பேஸ்புக் சில நிமிடங்களுக்கு செயலிழந்து போனது. மக்கள் மண்டை காய்ந்து போனார்கள் என்பது நினைவிருக்கலாம். கடந்த முறை கால் மணி நேரம் செயலிழந்தது பேஸ்புக்.

பேஸ்புக் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், தொழில்நுட்பக் கோளாறு காரணம் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது பேஸ்புக்கும், இன்ஸ்டாகிராமும் வழக்கம் போல செயல்படுகிறது.

ஜிடிபி உயரும்.. மக்கள் வேலை பார்க்கிறார்கள்

முன்னதாக பேஸ்புக் செயலிழந்தது குறித்து பலர் டிவிட்டரில் விதம் விதமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர் மக்கள்.

 Indian GDP grows 19% in the last few minutes as Internet services like Facebook, Tinder and Instagram go down

மோஹக் என்பவர் போட்ட டிவிட்டில், பிரேக்கிங்: இந்தியாவின் ஜிடிபி 19 சதவீதமாக உயரும். காரணம், பேஸ்புக், டின்டர், இன்ஸ்டாகிராம் செயல்படவில்லை என்று போட்டிருந்தார்.

English summary
Users worldwide were experiencing issues connecting to Facebook and Instagram, both on the Web and via mobile apps. Now both are back in the net.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X