For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முத்தத்தால் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்

By Siva
Google Oneindia Tamil News

கான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் மணமகனின் தந்தை இளம்பெண்ணை முத்தமிட்டதால் மணமகள் திருமணத்தை நிறுத்தினார்.

உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் உள்ள நாகலா கைர்பந்த் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி தயாலின் மகள் ருச்சி. அவருக்கும் ஜைதாராவைச் சேர்ந்த பாபுராம் மகன் ராஜேஷுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. புதன்கிழமை திருமணத்தன்று மாப்பிள்ளை ஊர்வலம் பெண் வீட்டுக்கு வந்தது. அப்போது பாபுராம் ருச்சியின் ஒன்றுவிட்ட சகோதரியை முத்தமிட்டார்.

Father-in-law kisses girl, bride returns baraat

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ருச்சி ஒழுக்கமில்லாத குடும்பத்தில் வாழ விரும்பவில்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தினார். பாபுராம் மன்னிப்பு கேட்டும் ருச்சி திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துவிட்டார்.

ருச்சியை அவரது தாய் சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை. இதையடுத்து பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரை ஒரு இடத்தில் வைத்து அடைத்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பரிசுப் பொருட்கள் மற்றும் திருமண செலவு ரூ.27 ஆயிரத்து 900ஐ பெண் வீட்டாரிடம் மாப்பிள்ளை வீட்டார் அளித்தனர். அதன் பிறகே அவர்களை அங்கிருந்து செல்ல பெண் வீட்டார் அனுமதித்தனர்.

English summary
A bride from Uttar Pradesh has stopped the wedding as her father-in law kissed her cousin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X