நடிகர் திலீப்பின் தந்திரத்தால் சிறை சென்ற டிவி நடிகர் தினேஷ் பணிக்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப் குறித்து டிவி நடிகர் தினேஷ் பணிக்கர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காவ்யா மாதவனுடனான தனது காதலை தனது மனைவி மஞ்சு வாரியரிடம் பாவனா போட்டு கொடுத்துவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவர் மீது திலீப்புக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவரை பழி வாங்க திட்டமிட்டு கூலியாட்களை ஏவிவிட்டார்.

இதன் விளைவு பாவனாவை கடத்திய 6 பேர் கொண்ட கும்பல் அவரை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்தது. இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு எதிரான புகார்கள் ஒவ்வொன்றாக வருகின்றன. அதன்படி திரைப்படத் தயாரிப்பாளரும், டிவி நடிகரும் தினேஷ் பணிக்கர் திலீப்பின் பணத்தாசையால் தாம் சிறை செல்ல நேரிட்டது குறித்து பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

 படத்தின் விநியோக உரிமை

படத்தின் விநியோக உரிமை

அவர் மேலும் கூறுகையில், கடந்த 1999-ஆம் ஆண்டில் திலீப்பின் உதயபுரம் சுல்தான் என்ற படத்தின் விநியோக உரிமையை பெறும் வேலைகளில் ஈடுபட்டு வந்தேன். அந்த படத்துக்காக ரூ. 40 லட்சத்தை செலவிட்டேன். ஆனால் படத்தயாரிப்பாளரோ கூடுதலாக பணம் கேட்டார். இதைத் தொடர்ந்து அந்த 40 லட்சம் இல்லாமல் ரூ. 22 லட்சத்தை கூடுதலாக முதலீடு செய்தேன்.

 பெரிய ஸ்டார்

பெரிய ஸ்டார்

நடிகர் திலீப்புக்கு ரூ.1.5 லட்சத்துக்கான காசோலையை அளித்தேன். இதைத் தொடர்ந்து அந்த படத்தால் ரூ.25 லட்சம் நஷ்டமடைந்தேன். 2 ஆண்டுகளுக்கு பிறகு திலீப் மிகப் பெரிய ஸ்டாராக உருவெடுத்திருந்தார். அப்போது காசோலை குறித்து பேசுவதற்காக என்னை அழைத்தார்.

 செக் மோசடி வழக்கு

செக் மோசடி வழக்கு

என்னுடைய நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் என்னிடம் பணம் இல்லை என்று கூறினேன். இருப்பினும் திலீப் அந்த செக்கை வங்கியில் டெபாசிட் செய்து என்னை செக் மோசடி வழக்கில் கைது செய்ய வைத்தார். சில சினிமா அமைப்புகள் தலையிட்டு என் பிரச்சினைக்கு தீர்வு கண்டன. எனினும் நடந்தது என்ன என்பது குறித்து ஊடகங்களிடம் கூறக் கூடாது என்று திலீப் எச்சரித்ததாக பணிக்கர் கூறினார்.

 தேவையில்லாத கோரிக்கைகள்

தேவையில்லாத கோரிக்கைகள்

இயக்குநர் துளசிதாஸ் திலீப் குறித்து கூறுகையில், என்னுடைய இயக்கத்தில் குட்டநாதன் எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடிக்க திலீப் ஒப்புக் கொண்டார். அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. திலீப்புக்கு முன்பணமும் வழங்கப்பட்டது. எனினும் தேவையில்லாத கோரிக்கைகளை திலீப் வைத்துக் கொண்டே இருந்தார்.

 காவ்யா மாதவனுக்காக அடம்

காவ்யா மாதவனுக்காக அடம்

காவ்யா மாதவனை ஹீரோயினாக போட வேண்டும் என்று கோரினார். இதேபோல் கேமராமேன், இசையமைப்பாளர் என அனைத்திலும் அவர் விருப்பத்துக்கு ஏற்ப வேண்டும் என்று கேட்பார். இதனால் தயாரிப்பாளருடன் சதி செய்து என்னையே துரத்திவிட்டார். பின்னர் வேறு டைட்டிலில் படத்தை இயக்கினேன் என்றார். இன்னும் நிறைய புகார்கள் புற்றில் இருந்து ஈசல் கிளம்புவது போல் கிளம்பி வருகின்றன. ஆனா தண்டனைதான் கிடைக்குமா என்று தெரியவில்லை.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Film producer and TV actor Dinesh Panicker is another person who has lashed out against Dileep. Speaking to a TV channel Dinesh Panicker recalled the events in 1999 which landed him in jail.
Please Wait while comments are loading...