For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தானை இந்தியா வென்றது... வாகா எல்லையில் 360 அடி உயரத்தில் இந்திய கொடி பறக்குது

பாகிஸ்தான் ஏற்றுவதற்கு ஒரு நாள் முன்னர் வாகா எல்லையில் இந்திய ராணுவத்தினர் 360 அடி உயரத்தில் தேசியக் கொடியை ஏற்றினர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பஞ்சாப்: பாகிஸ்தான் 400 அடி உயர கொடியை ஏற்றுவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்திய ராணுவத்தினர் 360 அடி உயர தேசியக் கொடியை வாகா எல்லையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்றி அந்நாட்டை வெற்றி கண்டுள்ளனர்.

வாகா எல்லையில் இந்தியா கடந்த மார்ச் மாதம் இந்திய ராணுவத்தினர் கொடியேற்றினர். அப்போது பலத்த காற்று வீசியதால் சில நாள்களிலேயே நமது தேசியக் கொடி சேதமடைந்தது. இதனால் அந்தக் கொடியை வீரர்கள் மே மாதத்தில் அகற்றினர்.

 கொடி மண்ணில் விழாமல்...

கொடி மண்ணில் விழாமல்...

கொடி மண்ணில் விழாமல் இருக்கவும், காற்று, புயல் ஆகியவற்றை தாங்கும் வகையிலும் நிரந்தர தீர்வு காணும் வரை தேசியக் கொடியை ஏற்றக் கூடாது என்று நமது வீரர்கள் முடிவு செய்திருந்தனர். அதேபோல் பாகிஸ்தான் நாட்டு கொடியும் அந்த பலத்த காற்றில் சேதமடைந்தது. எனினும் பாகிஸ்தான் கொடியை தயார் செய்யும் பணிகளை அந்நாட்டினர் தொடங்கினர்.

 360 அடி உயரம்

360 அடி உயரம்

பாகிஸ்தான் நாட்டுக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தினம் என்பதால் அன்றைய தினம் 400 அடி உயரத்தில் தயார் செய்துள்ள கொடியை ஏற்ற வேண்டும் என்று முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஞாயிற்றுக்கிழமை (ஆக.13) 360 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடியை இந்திய ராணுவத்தினர் ஏற்றினர்.

 16 வரை ஏற்றப்பட்டிருக்கும்

16 வரை ஏற்றப்பட்டிருக்கும்

பாகிஸ்தானை முந்திச் சென்றது மூலம் கொடி ஏற்றிய விவகாரத்தில் இந்தியா வெற்றி கண்டதாகவே கருதப்படுகிறது. இந்தியா ஏற்றிய கொடி, பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு அல்ல என்பதால் வரும் 16-ஆம் தேதி வரை ஏற்றப்பட்டிருக்கும். கொடிக்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வரை முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே இந்தியக் கொடி எல்லையில் ஏற்றப்படும்.

 ரூ.3.50 கோடி செலவில்...

ரூ.3.50 கோடி செலவில்...

அட்டாரி-வாகா எல்லை பகுதியில் ரூ.3.50 கோடி செலவில் 360 மீட்டர் உயரமும் கொண்ட நாட்டிலேயே மிக உயரமான தேசியக் கொடி கம்பம் இதுவாகும். கொடியானது 120 மீட்டர் நீளம், 80 மீட்டர் அகலம் என்பதை குறைத்து 90 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலமாக மாற்றப்பட்டுள்ளது.

English summary
India has won the flag war with Pakistan. The 360 feet high National Flag was back the Attari border on Sunday, a day before Pakistan could unfurl its 400 feet flag on its side of the border.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X