For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

82 வயதில் சிறையில் இருந்தபடியே, 12ம் வகுப்பு பாஸ் செய்தார் சௌத்தாலா

By BBC News தமிழ்
|

ஹரியானா மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சௌத்தாலா தனது 82ம் வயதில் பனிரெண்டாம் வகுப்பு பரீட்சையில் தேர்வு பெற்றுள்ளார்.

ஓம் பிரகாஷ் சௌத்தாலா
Getty Images
ஓம் பிரகாஷ் சௌத்தாலா

டெல்லியில் உள்ள திஹார் சிறையில் இருக்கும் தனது தந்தை சிறை தண்டனை காலத்தை அர்த்தமுள்ளதாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளார் என்று ஓம் பிரகாஷ் சௌத்தாலாவின் மகன் அபெய் சௌத்தாலா தெரிவித்தார்.

ஆசிரியர்களை பணியமர்த்துவதில் தவறு இழைத்ததற்காக 2013ல் ஓம் பிரகாஷ் சௌத்தாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய அபெய் சௌத்தாலா தனது தந்தை ''தினமும் சிறையில் உள்ள நூலகத்திற்கு செல்வதாக'' குறிப்பிட்டார்.

''அவர் செய்தித் தாள்கள் மற்றும் புத்தகங்களை வசிக்கிறார். அவருக்கு பிரியமான புத்தகங்களை அடுக்கி வைக்குமாறு கூறுகிறார். உலகம் முழுவதும் உள்ள சிறந்த அரசியல் தலைவர்கள் பற்றி அவர் படிக்கிறார்,'' என்று அபெய் சௌத்தாலா கூறினார்.

போலியான ஆவணங்களை கொண்டு 1999 மற்றும் 2000ம் ஆண்டுகளில், 3,206 ஆசிரியர்களை பணியில் அமர்த்தியதற்காக, ஓம் பிரகாஷ் சௌத்தாலா மற்றும் 54 நபர்கள் தண்டிக்கப்பட்டனர்.

திறன்மிகுந்த நபர்கள் நிராகரிப்பட்டு, லஞ்சம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டது என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்திய தேசிய லோக் தளக் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் சௌத்தாலா முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் மகன் ஆவார்.

இதையும் படிக்கலாம்:

மனிதர் உணர்ந்து கொள்ள ஒரு மனித நூலகம்

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பள்ளி மாணவிகள் உண்ணாவிரதம்

BBC Tamil
English summary
At the ripe old age of 82, former Haryana chief minister Om Prakash Chautala has passed his higher secondary examination in the first division, while serving out a 10 year sentence in Delhi’s Tihar jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X