டோனியின் செல்போன்கள் திருடியது யார்? டெல்லி போலீஸார் விசாரணை

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் தீவிபத்து நடந்தபோது அவரது 3 செல்போன்கள் திருடு போனதை தொடர்ந்து டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் செல்போன்கள் திருடப்பட்டிருப்பது குறித்து டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி ஒருநாள் பேட்டியில் தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் அணியில் விளையாடினார். இந்நிலையில் அந்த அணியினர் வெள்ளிக்கிழமை டெல்லியில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

Former Indian Captain Dhoni's Mobiles were theft in Delhi, police probes on.

அப்போது அந்த ஹோட்டலின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 7-வது தளத்தில் இருந்த டோனி மற்றும் ஜார்க்கண்ட் வீரர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக அரையிறுதி ஆட்டம் நேற்று தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி வங்கத்திடம் தோற்றது.

இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட ஹோட்டலில் டோனி தங்கி இருந்த போது அவரது 3 செல்போன்கள் மாயமாகி இருந்தது. இதுதொடர்பாக டோனியின் புகாரின்பேரில் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Former Indian skipper Mahendra Singh Dhoni filed a police complaint alleging that his three mobile phones were stolen during the recent fire at Delhi hotel.
Please Wait while comments are loading...