For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சி.கே.பிரசாத் நியமனம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவராக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே.பிரசாத் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பதவி வகித்து வந்தார். அவருடைய 3 ஆண்டு பதவி காலம் முடிவு அடைந்ததைத் தொடர்ந்து நீதிபதி சி.கே.பிரசாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.

கட்ஜூ தமது பதவி காலத்தில் பல சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தவர். 2004-2005ஆம் ஆண்டு தாம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில், ஜெயலலிதா, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்திலோ அல்லது நீதித்துறையின் நேர்மையான, சுதந்திரமான செயல்பாடுகளிலோ ஒரு போதும் தலையிட்டதில்லை; நீதிபதிகள் நியமன விவகாரத்தில் யார் பெயரையும் பரிந்துரை செய்ததில்லை; நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஜெயலலிதா மிகவும் மதிப்பளித்தார் என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஊழல் குற்றசாட்டுகளுக்கு ஆளான நீதிபதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகவும் அந்த நீதிபதிக்கு தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவரின் ஆதரவு இருந்ததாகவும் ஒரு சர்ச்சையை கிளப்பியிருந்தார் கட்ஜூ. இதில் திமுக தலைவர் கருணாநிதிக்கும் கட்ஜூக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்தது.

அதேபோல் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் புதிய சர்ச்சையை கிளப்பியிருந்தார். முன்னதாக நாட்டின், 90 சதவீத இந்தியர்கள், முட்டாள்கள். மதத்தின் பெயரால் அவர்களை, சமூக விரோத சக்திகள் எளிதில் ஏமாற்றி விடுகின்றன என்று "பகுத்தறிவு" பிரசாரம் செய்யப் போய் அதுவும் சர்ச்சையில் சிக்கியது. இப்படி பல சர்ச்சைகளின் சங்கமமாக இருந்தவர் கட்ஜூ. தற்போது கட்ஜூ ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக சி.கே. பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னா நகரில் பிறந்தவரான சி.கே.பிரசாத், 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந்தேதி முதல், இந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி வரை 4 ஆண்டுகள் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர்.

சி.கே. பிரசாத்தை துணை ஜனாதிபதி அமீது அன்சாரி தலைமையிலான 3 உறுப்பினர்கள் கொண்ட குழு தேர்வு செய்து அண்மையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தது. இதனைத் தொடர்ந்து புதிய பிரஸ் கவுன்சில் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பிரசாத்தை நியமித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

English summary
Former Supreme Court judge Justice C K Prasad has been appointed as the chairperson of the Press Council of India (PCI). He will succeed Justice Markandey Katju whose three-year term ended in October.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X