For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை முதல் பெங்களூர் அல்ல.. பெங்களூரு; மைசூர் அல்ல.. மைசூரு!

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் நகரின் பெயர் நாளை முதல் பெங்களூரு என்று அதிகாரப்பூர்வமாக மற்றப்பட்டு அமலுக்கு வருகிறது.

அதேபோல மைசூர் என்ற பெயரும் மைசூரு என்று மாற்றப்படுகிறது. இவை மட்டுமல்ல கர்நாடகத்தின் 12 முக்கிய நகரங்களின் பெயர்களும் பழைய கன்னட பெயர்களுக்கே நாளை முதல் மாற்றம் பெறுகின்றன.

From Tomorrow, It's Bengaluru, Not Bangalore

இதற்கான ஒப்புதலை மத்திய உள்துறை அமைச்சகம் முறைப்படி கொடுத்து விட்டது. கடந்த 9 ஆண்டுகளாக இந்த பெயர் மாற்றம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் நாளை ராஜ்யோத்சவா தினம் கொண்டாடப்படுகிறது. அதாவது கர்நாடக மாநிலத்தின் பிறப்பு தினமாகும் இது. நாளை 68வது ராஜ்யோத்சவா ஆகும். இதையடுத்து நாளை முதலே இந்த பெயர் மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.

இதுகுறித்து பழம்பெரும் கன்னட நடிகரான கிரிஷ் கர்னாட் கூறுகையில், இது உண்மையில் பெயர் மாற்றம் அல்ல. ஸ்பெல்லிங் மாற்றம்தான். நாங்கள் எப்போதுமே பெங்களூரு என்றுதான் அனைத்து மொழிகளிலும் சொல்லி வருகிறோம். உள்ளூர் மக்களும் கூட பெங்களூரு என்றுதான் பேசி வருகிறார்கள்.

மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று மாறியதை இதனுடன் ஒப்பிட முடியாது. அது முற்றிலும் பெயர் மாற்றமாகும். ஆனால் பெங்களூரு என்பது வெறும் ஸ்பெல்லிங் மாற்றம் மட்டுமே என்றார் அவர்.

ஆனால் இந்த ஸ்பெல்லிங் மாற்றத்திற்கு சற்று அதிருப்தியும் இருக்கத்தான் செய்கிறது. ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கூறுகையில், பெங்களூரு என்பதிலிருந்து பெங்களூர் என்று மாறி பல காலமாகி விட்டது.

ஐடி துறையில் நாங்கள் இன்னும் சற்று மாறி, 'Bangalored' என்றும் அழைக்கிறோம். பெங்களூர் என்ற பெயரில் எந்த அடிப்படைத் தவறும் இருப்பது போலத் தெரியவில்லை. அப்படி இருக்கையில் அதையே பின்பற்றுவதிலும் தவறில்லை.

உலகம் முழுவதும் பெங்களூர் என்றுதான் பிரபலம். எனவே அதை மறுபடியும் பெங்களூரு என்று மாற்றுவது சரியானதாக தெரியவில்லை.

இப்போது இதனால் நேரம், பணம், முயற்சி எல்லாமே விரயமாகும். குழப்பமே மிஞ்சும் என்றார் அவர்.

பெங்களூர், மைசூர் தவிர நாளை முதல் மாற்றம் பெறும் பிற நகரங்கள் விவரம். பெல்காம் -பெலகாவி, மங்களூர்- மங்களூரு, குல்பர்கா- கலபுராகி, ஹூப்ளி- ஹுப்பள்ளி, ஷிமோகா - சிவமோகா, சிக்மகளூர் - சிக்கமங்களூரு, பெல்லாரி - பல்லாரி, பீஜப்பூர்- விஜபுரா அல்லது விஜயபுரா, ஹோஸ்பேட் - ஹொசப்பேட்டை, தும்கூர்- தும்மகூரு.

ரைட்டு.. நாளை முதல் மாத்தி பேசலாம், எழுதலாம்!

English summary
Bangalore officially becomes Bengaluru tomorrow and Mysore will be Mysuru. 12 of Karnataka's major towns and cities revert to their old Kannada names after the Union Home Ministry this month cleared a proposal made by the state nine years ago. It's a birthday gift - Karnataka turns 68 on Saturday. The state had sought the Centre's clearance for the change in names in 2006.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X