For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூபாய் நோட்டு விவகாரம்.. நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் எனவும் சுரங்கம் மற்றும் கட்டுமான துறைகள் மந்தமான நிலை காணப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரத்தால் நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

கள்ள நோட்டுகள் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

GDP to fall to 3-yr low of 7.1%

நாட்டில் புழக்கத்தில் இருந்த 80 சதவீத ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் முடங்கியதாக கூறப்படுகிறது. பல்வேறு தொழில்கள் முடங்கியதால் ஏராளமானோர் வேலை இழந்தனர்.

இந்நிலையில், பருவமழை பொய்த்தது மற்றும் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு விவகாரம் ஆகியவை காரணமாக நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் பொருளாதார வளர்ச்சி குறையும் எனவும் சுரங்கம் மற்றும் கட்டுமான துறைகள் மந்தமான நிலையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம், வனத்துறை, மீன்பிடி தொழிலின் வளர்ச்சி கடந்த நிதியாண்டை காட்டிலும் நடப்பு ஆண்டு 4.1 சதவீதமாக விரிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The government on Friday predicted that the Indian economy will grow at 7.1% in 2016-17 lower than the 7.6% growth clocked in the previous fiscal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X