For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 43 நாட்டினருக்கு இ-விசா வசதி: இந்தியா அறிமுகம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 43 நாட்டினருக்கு இணையதளம் மூலம் இ-விசா வழங்கும் திட்டம் நவம்பர்-27 முதல் அறிமுகப்படுத்தபட உள்ளதாக மத்திய சுற்றுலத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய இ விசா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாவும் தொடங்கி வைப்பார்கள் என்று சுற்றுலாத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அந்த அதிகாரி கூறியதாவது :-

இ-விசா...

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் இணைய தளம் மூலம் பதிவு செய்து இ-விசா பெறலாம். இந்த வசதி வருகிற 27-ந்தேதி முதல் 43 நாடுகளுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

முதல் கட்டமாக...

முதல் கட்டமாக அமெரிக்கா, ரஷியா, பிரேசில், ஜெர்மனி, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீஷியஸ் உள்ளிட்ட 43 நாடுகளின் பயணிகள் இந்த வசதியை பெறுவார்கள்.

அடுத்த 2 ஆண்டுகளில்...

அடுத்த 2 ஆண்டுகளில் இத்திட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், இலங்கை, சோமாலியா, நைஜீரியா போன்ற சில குறிப்பிட்ட நாடுகள் தவிர அனைத்து நாடுகளுக்கும் பரவலாக்கப்படும்.

96 மணி நேரத்தில்...

இணையதளம் மூலம் இ-விசா பெற விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட இணையத்தள முகவரிக்கு சென்று அதை பெறுவதற்குரிய கட்டணத்தை செலுத்தவேண்டும். அதன்பின்னர் அவர்களுக்கு 96 மணி நேரத்தில் இ-விசா வழங்கப்பட்டு விடும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Visitors from over 40 countries, including Germany, the US, Israel and Palestine, will soon be able to avail the much-awaited electronic visa facility which is set to be launched on November 27.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X