For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடியைவிட சன்னியை அதிகம் தேடிய இந்தியர்கள்.. ஒரு பிளாஸ்பேக்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியைவிட சன்னி லியோனைத்தான் கூகுளில் இந்தியர்கள் அதிகமாக தேடியுள்ளனர். 2014ம் ஆண்டுக்கான தேடுதல் நபர்கள் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில்தான் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியர்கள் இன்னமும் நேரடியாக யூஆர்எல்களை டைப் செய்யாமல் கூகுள் மூலமாகவே தங்களுக்கு தேவையானவற்றை தேடுகிறார்கள் என்பதையும் இந்த ஆய்வு மெய்ப்பித்துவிட்டது.

அரசியல் கட்சியோ அல்லது உள்ளூர் உணவகமோ யாராக இருந்தாலும் ஆன்லைனில் அவர்கள் தோன்றுவது மிகவும் முக்கியம். அதேபோலத்தான் இந்திய பொதுத்தேர்தலும் கூகுள் டிரெண்டில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

மோடியை முந்திய சன்னி லியோன்

மோடியை முந்திய சன்னி லியோன்

இந்த தேர்தல் களேபரத்துக்கு நடுவேயும், தேர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமராக அரியணை ஏறியுள்ள நரேந்திரமோடியைவிட நடிகை சன்னிலியோனைத்தான் அதிகம் பேர் கூகுளில் தேடியுள்ளதுதான் வேடிக்கை. இந்தியர்கள் எதை நோக்கிய பார்வை உள்ளவர்கள் என்பதை கூகுள் டிரெண்ட் வெளிப்படுத்திவிட்டது.

பாலிவுட் நடிகைகளில் இடமில்லை

பாலிவுட் நடிகைகளில் இடமில்லை

அதேநேரம் பாலிவுட் நடிகைகள் பிரிவில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலில் சன்னிலியோன் பெயர் முதலில் இடம் பெறாதது ஆச்சரியம். பாலிவுட் நடிகை என்ற கோணத்தில் இல்லாமல், வேறு கோணத்தில் சன்னிலியோனை கூகுளில் இந்தியர்கள் தேடியுள்ளனர் என்பதுதான் இதன் அர்த்தம்.

நடிகைகளில் கத்ரினா கைப் முதலிடம்

நடிகைகளில் கத்ரினா கைப் முதலிடம்

பாலிவுட் நடிகைகளில் அதிகம் தேடப்பட்டவர் கத்ரினா கைப். அதற்கு அடுத்தடுத்த இடங்களில், தீபிகா படுகோனே, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் உள்ளனர். ஆண் நடிகர்களில் சல்மான்கான் அதிகம் தேடப்பட்டுள்ளார்.

டெக்னாலஜியில் இவர்கள்..

டெக்னாலஜியில் இவர்கள்..

டெக்னாலஜி சம்மந்தப்பட்ட தேடுதல்களில் மோடோஜி முதலிடத்திலுள்ளது. ஐபோன்6, சாம்சங் கேலக்சி எஸ்5, மோட்டோ இ, நோகியா எக்ஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ரயில்வே நம்பர் 1

ரயில்வே நம்பர் 1

பயனாளர் வெப்சைட் தொடர்பான தேடுதலில் இந்திய ரயில்வே மற்றும் கேட்டரிங் கழகமான, ஐஆர்சிடிசி வெப்சைட்டை அதிகம் பேர் தேடியுள்ளனர். பிளிப்கார்ட், எஸ்பிஐ ஆன்லைன், ஸ்னேப்டீல், பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் வருகின்றன.

தேர்தலுக்கு முக்கியத்துவம்

தேர்தலுக்கு முக்கியத்துவம்

டிரெண்டிங் கருப்பொருள் என்று எடுத்துக் கொண்டால் முதலிடத்தில் தேர்தல்-2014 வருகிறது. பிபா உலககோப்பை 2014, ஐபோன் 6, கேட் 2015, நரேந்திரமோடி, ஐபிஎல் 2014, ராகினி எம்எம்எஸ் 2, கிக், ஜெய்ஹோ, ஹேப்பி நியூயியர் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் வருகின்றன.

English summary
The Google India top searches list for 2014 is out and it has two big learnings for the country. One, we as a country still search for URLs instead of typing them directly on the address bar and two, despite the appeal of BJP star campaigner turned Prime Minister Narendra Modi, we are still searching more for Sunny Leone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X