For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமையல் கேஸ் விலையையும் உயர்த்த மத்திய அரசு முடிவு

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சமையல் எரிவாயுவின் விலையை மூன்றில் ஒரு பங்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை மத்திய நிதித்துறை அமைச்சரான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டீசல் விலையைக் குறைத்து, அதன் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்த கையோடு இந்த முடிவையும் மத்திய அரசு எடுத்துள்ளது.

Government Decides To Raise Local Gas Prices By A Third

புதிய விலை உயர்வானது, வருகின்ற நவம்பர் முதல் தேதியில் அமல்படுத்தப்படும் என்றும் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வானது, முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட விலைஉயர்வை விட மிகக் குறைவானது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் ரங்கராஜன் கமிட்டியின் அறிக்கை இந்த விலை உயர்வை பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வானது முக்கிய உற்பத்தியாளர்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஸ்டேட் ரன் ஆயில் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் ஆகியோருக்கு வரமாக அமையும். இந்தியாதான் எரிவாயு இறக்குமதியில் பெரும் பங்கு வகித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Union Cabinet has decided to raise gas prices by about a third to $5.61 per million British thermal units (mmBtu), Finance Minister Arun Jaitley said on Saturday, a move that seeks to make production more economical and boost domestic supply
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X