For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரிவினைவாத தலைவர்களை குடும்பத்தோடு பாக்.க்கு நாடு கடத்தனும்பா... ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு!!

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரை பிரிக்க எண்ணுகிற தலைவர்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமார் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம், அம்மாநிலத்தில் நடத்திய பேரணியில் பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களும், அந்நாட்டு கொடியையும் ஏந்தி சென்றதால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Government should deport Kashmiri separatists to Pakistan: RSS

இதனால் மஸ்ரத் ஆலம் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஐம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய இந்திரேஷ் குமார், பாகிஸ்தானுக்கு ஆதரவாக யாரெல்லாம் குரல் எழுப்புகிறார்களோ குறிப்பாக பிரிவிணைவாதிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் இந்திய மண்ணில் வாழ மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

பிரிவினைவாத தலைவர்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவதன் மூலம் ஐம்மு காஷ்மீரில் அமைதியும், வளர்ச்சியும் ஏற்படும் என்றார்.

ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் ஒருவர் இப்படி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The RSS today came down hard on separatists raising pro-Pakistan slogans, saying they should be deported to Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X