For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2வது ஸ்மார்ட் சிட்டி பட்டியல் வெளியீடு.. ஒரு தமிழக நகரமும் இடம் பெறவில்லை!

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2வது பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு இடம் இல்லை.

2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள நகரங்களில் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டிகளாக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன்படி முதல்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 20 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த பட்டியலில் கோவை, சென்னை ஆகிய நகரங்கள் இடம்பெற்றிருந்தன. நகரங்களுக்கு இடையேயான போட்டியின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2வது பட்டியலை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த பட்டியலில் 13 நகரங்களின் பெயர்கள் உள்ளன. அவை,

லக்னோ, பகல்பூர், நியூடவுன் கொல்கத்தா, பரீதாபாத், சன்டிகர், ராய்பூர், ராஞ்சி, தர்மசாலா, வாரங்கல், பனாஜி, அகர்தலா, இம்பால் மற்றும் போர்ட் பிளேர். இந்த பட்டியலில் தமிழக நகரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் சிட்டி போட்டியில் கலந்து கொள்ளும் மாநிலங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் 43 கேள்விகளுக்கு ஸ்மார்ட் பதில்களை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் சிட்டிகளாக தேர்வு செய்யப்படும் நகரங்களுக்கு 5 ஆண்டுகளில் மத்திய அரசு தலா ரூ.500 கோடி அளிக்கும்.

English summary
Centre has released the second list of smart cities on wednesday that has 13 cities including Lucknow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X