For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏடிஎம்களில் பணம் எடுக்கும் இலவச சேவையை 3ஆக குறைக்க மத்திய அரசு திட்டம்!!

ஏடிஎம்களில் இலவசமாக பணம் எடுப்பதை 3ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த வங்கிகளின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: ஏடிஎம்களில் இலவசமாக பணம் எடுப்பதை 3ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக வங்கிகள் விடுத்துள்ள கோரிக்கையை விரைவில் நடைமுறைபடுத்தவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

ஏடிஎம்களில் இப்போது வரை பணம் 8ல் இருந்து 10 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதற்கு மேல் எடுத்தால் வங்கிக்கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும்.

Govt considering to withdrawal free ATM service as three times!!

இதுவே மக்களுக்கு பெரும் கஷ்டத்தை கொடுத்துவந்தது. இந்நிலையில் ஏடிஎம்களில் இலவசமாக பணம் எடுப்பதை 3 முறையாக குறைக்க வேண்டும் என வங்கிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இதையடுத்து வங்கிகளின் கோரிக்கையை ஏற்று ஏடிஎம்களில் இலவச பணம் எடுக்கும் சேவையை மூன்றாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அரசு பரிசீரித்து வருவதாகவும் இந்த நடவடிக்கை விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதி 3 முறையாக குறைக்கப்பட்டால் மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு நேரடியாக மாறிவிடுவார்கள் என்பதால் இந்த நடவடிக்கையை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது கணக்கு உள்ள வங்கி ஏடிஎம்களில் 5 முறை பணம் எடுக்கலாம். அதற்கு மேல் அந்த வங்கி ஏடிஎம்மிலோ அல்லது மற்ற வங்கி ஏடிஎம்களிலோ பணம் எடுத்தால் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
The government is considering a proposal to reduce the free withdrawals by more than half to just three, instead of the nearly 8-10 now, including from banks where one has accounts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X