For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்வு: உடனடியாக அமலுக்கு வந்தது

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், சஹாரன்பூர் நகரில் மத்திய அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய, மாநில அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 65-ஆக உயர்த்தப்படும் என்றார்.

 Govt doctors retirement age to be raised to 65

மருத்துவர்களுக்கு பற்றாக்குறை உள்ள நிலையில், இரண்டாண்டுகளில் நாட்டுக்கு தேவைப்படும் மருத்துவர்களை பூர்த்தி செய்வது மிகவும் கடினம் என்றும், மருத்துவ வசதிக்காக ஏழை, எளிய மக்கள் காத்திருக்க முடியாது என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இதனைக் கருத்தில்கொண்டே, அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதானது, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65-ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.

இதன்படி மத்திய சுகாதாரத் துறையில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒப்புதல் அளித்தார். மோடி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இன்று முதல் அத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

English summary
Govt doctors retirement age to be raised to 65, pm modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X