துளசி, ஏலக்காய் கலவையுடன் பசுக் கோமியம் ரூ.365-க்கு ஆன்லைனில் விற்பனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆன்லைன் வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், துளசி, ஏலக்காய் கலவையுடன், அரை லிட்டர் பசுக் கோமியம் ரூ.325-க்கு ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது.

பண மதிப்பிழக்க நடவடிக்கைக்கு பின்னர், ஆன்லைன் டிஜிட்டல் வர்த்தகத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் போல், நமது மக்களின் எண்ணமும் ஆன்லைன் வர்த்தகத்தை நோக்கியே சென்று கொண்டுள்ளது. எந்த பொருளை எடுத்தாலும், அதனை ஆன்லைனில் வாங்குவது பொதுமக்கள் சிலரின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

Gowmuthra sale in online

இந்நிலையில், பசுக் கோமியத்தையும் விற்க ஆரம்பித்துள்ளன பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், அரை லிட்டர் பசுக் கோமியத்தை ரூ.365-க்கு விற்பனை செய்து வருகிறது. அதில், பசுக் கோமியத்துடன் துளசி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அதேபோல், பசுக் கோமியத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Gowmuthra sale in online market
Please Wait while comments are loading...