For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிகச் சிறந்த வரவேற்பு, விருந்தோம்பல்.. இந்தியாவுக்கு நன்றி சொன்ன ஒபாமா

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனக்கு டெல்லியில் அளிக்கப்பட்ட வரவேற்பு மிகச் சிறப்பாக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

3 நாள் பயணமாக இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார் ஒபாமா. அவருடன் மனைவி மிஷல் ஒபாமா மற்றும் அமெரிக்க அரசின் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவும் வந்துள்ளனர்.

Grateful for Extraordinary Hospitality, Says Barack Obama

மரபுகளை மீறி பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்திற்கு நேரில் சென்று ஒபாமாவை வரவேற்றார். பின்னர் ஒபாமா குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு அரசு முறைப்படி பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. 21 குண்டுகள் முழங்க முப்படையினர் அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஒபாமா கூறுகையில், இது மிகவும் அசாதாரணமான விருந்தோம்பல். இதற்காக நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். இந்தியா எனக்குக் கொடுத்துள்ள மாபெரும் கெளரவம் இது என்றார் ஒபாமா.

English summary
US president Barack Obama is at Hyderabad House in Delhi for bilateral talks and a working lunch with Prime Minister Narendra Modi. At the Rashtrapati Bhawan Mr Obama greeted President Pranab Mukhejee and Prime Minister Narendra Modi with a namaste. "I am grateful for the extraordinary hospitality, it's a great honour to be back in India," the US president said. He inspected a Guard of Honour led by a woman officer of the Indian Air Force, Wing Commander Puja Thakur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X