For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சினிமா, கேபிள் டி.வி.சேவைக்கு ஜி.எஸ்.டி.யில் வரி குறைப்பு... மத்திய அரசு அறிவிப்பு

சினிமா, கேபிள் டிவி சேவைகளுக்கு ஜி.எஸ்.டி.யில் வரி குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா முழுவதும் பொருட்கள் மற்றும் சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரியை வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அதனடிப்படையில், பொருட்கள் மீது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 விதமான ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை அமல்படுத்தப்படவுள்ளது.எந்தெந்த பொருட்களை எந்த சதவீத வரிவிகிதத்தில் சேர்ப்பது என்பது பற்றி காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடந்த, மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

அப்போது இந்தியஅளவில் வழங்கப்படுகிற 1,200 வகையான சரக்குகளையும், 500 விதமான சேவைகளையும் இந்த நான்கு அடுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பின்கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடங்கிய சேவைகளுக்கு சரக்கு, சேவை வரியை குறைக்க முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் உள்ள விவரங்கள் இங்கே.

சினிமாவுக்கு 28% கேளிக்கை வரி

சினிமாவுக்கு 28% கேளிக்கை வரி

தற்போது சினிமா அரங்குகளில் திரையிடப்படும் சினிமா படங்களுக்கான கேளிக்கை வரி பல மாநிலங்களில் அதிகபட்சமாக 100 சதவீதம் வரை உள்ளது. இது ஜி.எஸ்.டி.யில் 28 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி முறையில் கேளிக்கை வரி உள்ளிட்ட அனைத்துவித வரிகளும் அடங்கிவிடுவதால் இனிமேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் காட்சிகள் மீது பஞ்சாயத்து அல்லது மாநகராட்சிகள் விதிக்கும் வரி மட்டும் நீடிக்கும்.

கேபிள் டி.வி.சேவைக்கு 18% வரி

கேபிள் டி.வி.சேவைக்கு 18% வரி

இதேபோல், ஜி.எஸ்.டி. கவுன்சில் கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக்கான வரியை 18 சதவீதமாக குறைக்க முடிவு செய்து இருக்கிறது. தற்போது இந்த சேவைகள் மீது மாநில அரசுகள் விதிக்கும் கேளிக்கை வரி 10 முதல் 30 சதவீதமாகவும், கூடுதல் வரி 15 சதவீதமாகவும் உள்ளது.

சர்க்கஸ் நிகழ்ச்சிக்கும் 18% வரி

சர்க்கஸ் நிகழ்ச்சிக்கும் 18% வரி

இதேபோல் சர்க்கஸ், நாடக அரங்குகள், கிராமிய நடனம், நாடகங்கள் உள்ளிட்ட இந்திய கலாசார நடனங்கள் ஆகியவற்றின் மீது ஜி.எஸ்.டி.யில் விளம்பர மதிப்பு வரி மட்டுமே 18 சதவீதம் விதிக்கப்படும்.

 சிமெண்ட்டுக்கு 3% வரி குறைப்பு

சிமெண்ட்டுக்கு 3% வரி குறைப்பு

ஸ்மார்ட் போன், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிமெண்ட் ஆகியவற்றின் மீதான வரிகளையும் ஜி.எஸ்.டி.யில் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது சிமெண்ட்டுக்கு அனைத்து வரிகளையும் சேர்த்தால் 31 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. இது 28 சதவீதமாக இருக்கும்.

மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கும் வரி குறைப்பு

மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கும் வரி குறைப்பு

எல்லாவித மருத்துவ சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தற்போதைய வரி விதிப்பு முறையில் அதிகபட்சமாக 13 சதவீத வரி உள்ளது. ஜி.எஸ்.டி.யில் மருந்துகளுக்கு 12 சதவீத வரியே பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ கருவிகள் மீதான வரியும் ஜி.எஸ்.டி.யில் 12 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்மார்ட் போனுக்கும் வரிக்குறைப்பு

ஸ்மார்ட் போனுக்கும் வரிக்குறைப்பு

ஜி.எஸ்.டி.யில் ஸ்மார்ட் போன் மீதான வரியும் குறைக்கப்படுகிறது. எல்லா மாநிலத்திற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 13.5 சதவீதம் வரை ஸ்மார்ட் போன்களுக்கு வரி விதிக்கப்படுகிறது.

சினிமா கட்டணம் குறையும்

சினிமா கட்டணம் குறையும்

சினிமா, கேபிள் டி.வி., டி.டி.எச், ஆகிய பொழுதுபோக்கு சேவைகள் மற்றும் மருந்துகள், மருத்துவ கருவிகள், ஸ்மார்ட் போன் ஆகியவற்றின் மீது ஜி.எஸ்.டி.யில் வரி குறைக்கப்படுவதால் ஜூலை 1ம் தேதி முதல் இவற்றின்க ட்டணங்கள் மற்றும் விலை குறையும் என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

English summary
Taxation on Cinema, cable and DTH services shall come down under the GST regime as the entertainment tax levied by states has been subsumed in the Goods and Services Tax, the government told on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X