For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சினிமாவுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாகக் குறைப்பு!

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே விதமான மறைமுக வரியாக சரக்கு, சேவை வரிவிதிப்பு முறை அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி நடைமுறைக்கு வருகிறது.

GST on movie tickets reduced to 18 percent

இதுதொடர்பாக ஏற்கனவே 1,200-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான வரி விதிப்பு அளவை ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்தது. ஆனால் அவற்றில் 133 பொருட்கள் மற்றும் சேவையின் வரி விதிப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.

குறிப்பாக சினிமா டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி.யை 28 சதவீத அளவுக்கு நிர்ணயம் செய்ததற்கு நடிகர் கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர், ''சினிமா என்பது கலை; சூதாட்டம் அல்ல. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் திரைப்படத்துறையின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். 28 சதவீத வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும்,'' என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தமிழ் சினிமாவின் பல்வேறு அமைப்புகளும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரியிருந்தன.

இந்த கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து முடிவு எடுப்பதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் விஞ்ஞான பவனில் நேற்று நடந்தது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் 66 பொருட்கள், சேவைகளின் வரிவிதிப்பை குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

குறிப்பாக ரூ.100 மற்றும் அதற்கு குறைவான மதிப்பிலான சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜி.எஸ்.டி., 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணங்களை கொண்ட சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜி.எஸ்.டி. 28 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Union govt has reduced GST on cinema tickets from 28 percent to 18 percent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X