For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்று தாஜ்மஹாலை இடிக்க சொன்ன அசாம் கான் இன்று வக்புவாரியத்திடம் ஒப்படைக்க கோருகிறார்!

By Mathi
Google Oneindia Tamil News

லக்னோ: தாஜ்மஹாலை இடிப்பதற்கு தானே தலைமை தாங்குவேன் என்று கடந்த ஆண்டு கொக்கரித்த உத்தரப்பிரதேச அமைச்சர் அசாம் கான் தற்போது அதை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மூத்த அமைச்சர் அசாம் கான் சர்ச்சைகளின் சங்கமமாக இருப்பவர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், அதெப்படி பொதுமக்களின் வரிப்பணத்தில் ஷாஜஹான் தாஜ்மகாலை கட்ட முடியும்? அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? தாஜ்மஹாலை இடிக்கும் கும்பலுக்கு நானே தலைமை ஏற்பேன் என்று பேசி பஞ்சாயத்தை உருவாக்கினர்.

Hand Over Taj Mahal to Waqf Board, Demands Uttar Pradesh Minister Azam Khan

அதே அசாம் கான் தான் தற்போது, தாஜ்மஹாலை வக்பு வாரிய கட்டுப்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தாஜ் மஹாலை மத்திய அரசு தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக தாஜ்மஹால் உள்ளது.

இதில் கிடைக்கும் வருவாய் ஏழை முஸ்லிம்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும். மும்தாஜின் நினைவிடமான தாஜ்மஹால் உலக அதிசயத்தின் ஒன்றாக திகழ்ந்து மிகப் பெரிய வருவாயை ஈட்டுகிறது.

இதை முஸ்லிம்களின் கல்விக்காக செலவிடுவதே நியாயமானது. இதன் மூலம் வரும் வருவாய் ஏழை சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பயன்பட வேண்டும். எனவே, தாஜ்மஹாலை சன்னி முஸ்லிம்களின் மத்திய வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

இதன் மூலம் வக்பு வாரியமே தாஜ்மஹாலுக்கான நிஜாமை நியமித்து, கிடைக்கும் வருவாயை முஸ்லிம்களின் கல்விக்காக பயன்படுத்திக்கொள்ள இயலும் என்று கூறியுள்ளார்.

இதுதாண்டா அரசியல்!!

English summary
Senior Samajwadi Party leader and Uttar Pradesh Minority Affairs Minister Azam Khan triggered a controversy when he demanded that the iconic Taj Mahal be handed over to the Sunni Waqf Board since it was a mausoleum of two Muslims. Khan is also the state Waqf minister; the Waqf Board has jurisdiction over Muslim tombs and graves.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X