For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமான விபத்துகள் அதிகரித்துவிட்டதா?: இல்லை நமக்கு தான் அப்படி தோன்றுகிறதா?

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: அண்மையில் விமான விபத்துகள் அதிக அளவில் நடக்கிறதா. இல்லை ஒரு சில விபத்துகளை பார்த்து மக்களுக்கு அவ்வாறு தோன்றுகிறதா?

விமான விபத்துகளால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்பெயினில் இருந்து ஜெர்மனி சென்ற ஏர்பஸ் ஏ320 விமானம் பிரான்ஸில் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 150 பேர் பலியாகினர். இதனால் மக்களின் அச்சம் அதிகரித்துள்ளது.

கடந்த 15 மாதங்களில் விமான விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2014

2014

விமான போக்குவரத்தை பொருத்தவரை 2014ம் ஆண்டு தான் பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துகள்

விபத்துகள்

1946ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்த விமான விபத்துகளில் 2014ம் ஆண்டில் தான் குறைந்த அளவில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

21 விபத்துகள்

21 விபத்துகள்

2014ம் ஆண்டில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உள்பட 21 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.

பலி

பலி

கடந்த ஆண்டு நடந்த விமான விபத்துகளில் 990 பேர் பலியாகியுள்ளனர். 2005ம் ஆண்டில் இருந்து குறைவாக இருந்த பலி எண்ணிக்கை கடந்த ஆண்டு தான் ஒரேயடியாக அதிகரித்துவிட்டது.

2015

2015

2015ம் ஆண்டு துவங்கி 3 மாதங்கள் கூட முடியாத நிலையில் 6 பெரிய விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்துகளில் 236 பேர் பலியாகியுள்ளனர். இதே அளவில் விபத்துக்கள் ஏற்பட்டால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தான் அதிக விமான விபத்துகள் நடந்த ஆண்டாகிவிடும்.

English summary
According to the Aviation safety network, 2014 was the safest on record for total number of crashes but people are getting the feeling that more number of planes are getting crashed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X