For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆருஷி கொலை வழக்கு தொடர்பான காட்சிகள் இல்லை – இந்திப் படத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் அரூஷி கொலை வழக்கு தொடர்பான படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கவுதம புத்தநகர் மாவட்டம் நொய்டா பகுதியை சேர்ந்த டாக்டர் தம்பதியினர் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர். இவர்களது 14 வயது மகள் ஆருஷி கடந்த 2008 ஆம் தேதி மே மாதம் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார்.

HC rejects Talwars’ plea against film allegedly based on Arushi murder case…

இதேபோல், அவர்களது வீட்டில் வேலைபார்த்து வந்த ஹேமராஜ் என்பவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த இரட்டை கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுரை கைது செய்து விசாரித்தார்கள். அதன்பின், அவர்களை குற்றவாளிகள் என்று டெல்லி கோர்ட் அறிவித்தது.

இந்தநிலையில், ஆருஷி கொலை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவானதாக கூறப்படுகிறது. எனவே, இந்த படம் வெளியாவதற்கு தடை விதிக்க கோரி ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் ஆகியோர் மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.எம்.கன்னடே, இந்த திரைப்படத்தின் கதை ஆருஷி கொலை வழக்குடன் ஒத்துப்போகவில்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

English summary
The Bombay High Court today rejected a petition filed by dentist couple Nupur and Rajesh Talwar who had sought stopping of the release and telecast of a film allegedly based on the murder of their daughter Arushi and domestic servant Hemraj.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X