For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெபாடிடிஸ் சி நோயாளிகளுக்கு ஒரு சந்தோஷ செய்தி.. மருந்து விலை அதிரடி குறைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: அதிகளவு ஹெபாடிடிஸ் சி நோயாளிகளைக் குணமாக்கும் வகையில், அந்நோய்க்கான மருந்து விலையை அதிரடியாக குறைத்துள்ளது மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டுக் கழகம்.

இந்த கட்டணச் சலுகையானது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்துக்கு தரப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக அளவிலான நோயாளிகளுக்குப் பலன் கிடைக்கும் என்று தெரிகிறது. அதன்படி தற்போது இந்த மருந்தின் அதிகபட்ச விலை ரூ. 67 ஆயிரமாக இருக்கும்.

sofosbuvir, ledipasvir மற்றும் daclatasvir ஆகிய மருந்துகளுக்கு இந்தக் கட்டணக் குறைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் விற்பனைக்கு...

விரைவில் விற்பனைக்கு...

இந்த மருந்துகள் விரைவில் இந்திய சந்தைக்கு வரவுள்ளன என்பது நினைவிருக்கலாம். தற்போது இந்த மருந்துகளின் விலை இந்தியாவைப் பொருத்துவரை மிக மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பக்க விளைவுகள்...

பக்க விளைவுகள்...

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி இந்தியாவில் 1.2 கோடி பேருக்கு ஹெபாடிடிஸ் சி பாதிப்பு உள்ளது. தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் மருந்தான பெஜிலேட்டட் இன்டர்பெரான் மருந்தால் பல பக்க விலைவுகள் ஏற்படும். இந்த நிலையில்தான் இந்தப் புதிய மருந்து அறிமுகமாகிறது.

யோசனை...

யோசனை...

தற்போது அறிமுகமாகும் புதிய மருந்துகள் இந்தியாவில் பரிசோதிக்கப்படவுள்ளன. இதற்குத்தான் கட்டணத்தைக் குறைத்துள்ளனர். இதன் மூலம் அதிக அளவிலான நோயாளிகள் இதைப் பயன்படுத்த முடியும் என்பது மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் யோசனையாகும்.

கட்டணச் சலுகை...

கட்டணச் சலுகை...

இதேபோன்ற கட்டணச் சலுகையை இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, நேபாள், வியட்நாம் நாடுகளும் கோரியுள்ளன என்பது நினைவிருக்கலாம்.

கூட்டுக்கலப்பு மருந்து...

கூட்டுக்கலப்பு மருந்து...

Sofosbuvir மருந்தானது கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டது. daclatasvir மருந்து இந்த மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் கூட்டுக் கலப்பு மருந்துக்கு 90 சதவீத அளவுக்கு நோயைக் குணப்படுத்தும் சக்தி உள்ளதாம்.

English summary
In a move that comes as a huge relief to patients of chronic Hepatitis C, the apex committee of the Central Drugs Standard Control Organisation (CDSCO) has granted a waiver of local trials for crucial new direct-acting antiviral drugs treating the disease.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X