For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிகாரி உதவியுடன் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய ஜனார்த்தன ரெட்டி.. டிரைவரின் தற்கொலை லெட்டரால் கிலி

கர்நாடக அரசு உயர் அதிகாரியின் உதவியுடன் ஜெனார்த்தன ரெட்டி தனதுகறுப்புப்பணத்தை மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தற்கொலை செய்துகொண்ட அந்த அதிகாரியின் ஓட்டுநர் கைப்பட எழுதிய கடிதம் சிக்கியுள

Google Oneindia Tamil News

பெங்களூரு: சுரங்க மாஃபியா ஜனார்த்தன தனது கறுப்புப் பணத்தை கர்நாடாக அரசு உயர் அதிகாரி ஒருவர் உதவியுடன் மாற்றியது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக தற்கொலை செய்து கொண்ட அந்த அதிகாரியின் ஓட்டுநர் கைப்பட எழுதிய கடிதமும் சிக்கியுள்ளது.

சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டு பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்தவர் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி. இவர் அண்மையில் நாடே ரூபாய் நோட்டு பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னாமானது போது தனது மகளுக்கு 500 கோடி ரூபாய் செலவு செய்து வெகு விமரிசையாக திருமணம் செய்து வைத்தார்.

How Janardhan Reddy converted his black Money: Suicide note explains!

இந்த திருமணம் நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வருமான வரித்துறைஅதிகாரிகள் ஜெனார்த்தன ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர்.

இந்நிலையில் கர்நாடக அரசின் உயர் அதிகாரி பீமா நாயக் என்பவருக்ருகு ஓட்டுநராக இருந்த ரமேஷ் கவுடா என்பவர் தனது அறையில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அப்போது அந்த அறையை சோதனை செய்த அதிகாரிகள் அங்கிருந்த 23 பக்கங்கள் கொண்ட கடிதத்தை கைப்பற்றினர்.

அதில் ஜனார்த்தன ரெட்டி தனது பல கோடி ரூபாய் கறுப்புப்பணத்தை பீமா நாயக் மூலம் 20, 50, 100 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றியதாக எழுதியுள்ளார். இதற்கு பா.ஜ.க எம்பி ஸ்ரீராமலுவும் துணை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த ஊழல் குறித்து தகவல் தெரிவிக்க முயன்றபோது ஜனார்த்தன ரெட்டி மற்றும அரசு அதிகாரி பீமா நாயக் ஆகியோர் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் ரமேஷ் கவுடா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஜனார்த்தன ரெட்டி, பீமா நாயக் மற்றும் பா.ஜ.க எம்பி ஸ்ரீராமலு சந்திக்கும் போது பயன்படுத்திய வாகனங்களின் எண்களையும் ரமேஷ் கடிதத்தில் குறிபிப்பிட்டுள்ளார்.

ஜனார்த்தன ரெட்டியின் கறுப்புப்பணத்தை வெள்ளையாக்க பீமா ராவ் கமிஷன் தொகை பெற்றுக்கொண்டதாகவும் ரமேஷ் கவுடா அந்த கடிதத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஸ்ரீராமலு தன்மீதான குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். ரமேஷ் கவுடா தேவையில்லாமல் தன் பெயரை அந்த கடிதத்தில் குறிபிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

English summary
Janardhana Reddy converted his black money with the help of KAS officer Bheema Naik. The KAS officer's driver commit suicide and his hand written letter explains who are all contributed in this corrption, and how they converted the money. The Driver Ramesh gowda who commit suicide he accused the BJP MP sri ramalu also having part in this corruption.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X