For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூக்கிலிடப்பட்ட மும்தாஜ் குவாத்ரி... உண்மையிலேயே பாகிஸ்தான் திருந்தி விட்டதா?

Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தானில் தூக்கிலிடப்பட்ட மும்தாஜ் குவாத்ரி நிகழ்வு ஒரு முக்கியக் கேள்வியை எழுப்பியுள்ளது.

2011ம் ஆண்டு பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் தசீரை சுட்டுக் கொன்றதற்காக தூக்கிலிடப்பட்டுள்ளார் மும்தாஜ் குவாத்ரி. இவர் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார்.

தசீர் பலதார மண சட்டம் குறித்து கேள்வி எழுப்பியதால்தான் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பின் குவாத்ரிக்கு ஆதரவாக பலரும் கிளம்பினர். பேஸ்புக்கில் குவாத்ரிக்கு ஆதரவாக பல நூறு பக்கங்கள் திறக்கப்பட்டன. பலரும் குவாத்ரியின் புகைப்படத்தை புரபைல் படமாக வைக்க ஆரம்பித்தனர்.

ஆதரவு...

ஆதரவு...

மத பழமைவாதிகள் குவாத்ரிக்கு ஆதரவாக திரண்டனர். அவர்களின் ஆதரவு குவாத்ரிக்கு அபரிமிதமாக கிடைத்தது. மேலும் பல வக்கீல்களும் கூடஅவருக்கு ஆதரவாக இருந்து வந்தனர். குரல் கொடுத்து வந்தனர். ஆனால் குவாத்ரியை பாகிஸ்தான் அரசு தூக்கிலிட்டுத் தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

போராட்டங்கள்...

போராட்டங்கள்...

இதையடுத்து இதை எதிர்த்து தற்போது பாகிஸ்தானில் பரவலாக போராட்டங்கள் வெடித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள தெற்கு மற்றும் தெற்காசிய உட்ரோ வில்சன் சர்வதேச மையத்தின் சீனியர் அசோசியேட் மைக்கேல் குகல்மேன் கூறுகிறார்.

பழமைவாதிகள்...

பழமைவாதிகள்...

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘குவாத்ரி தூக்கிலிடப்பட்டது சிறிய விஷமல்ல. தனது நாட்டில் மிகப் பெரியஅளவில் பாராட்டப்பட்ட, புகழப்பட்ட நபர் ஒருவரை பாகிஸ்தான் அரசு தூக்கிலிட்டுள்ளது நிச்சயம் மிகப் பெரிய விஷயமாகும். இருப்பினும் குவாத்ரி சம்பவத்தை மட்டும் தனியாக பார்க்கக் கூடாது. அவரைப் போல பல பழமைவாதிகள் தூக்கிலிடப்பட்டுளளதையும் நாம் மறந்து விடக் கூடாது. கடந்த அக்டோபர் மாதம் குவாத்ரிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

தடை...

தடை...

சமீப வாரங்களில் பஞ்சாப் மாகாணத்தில், தப்லிகி ஜமாத் என்ற பழமைவாத அமைப்பு தனது கல்வி நிறுவனங்களையும், வேலைவாய்ப்பு நிறுவனங்களையும் நடத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. மேலும் பஞ்சாப் மாகாணத்தில் மகளிர் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதெல்லாம் மாற்றத்தை உணர்த்துவதாகவே உள்ளன.

மாற்றம்...

மாற்றம்...

பாகிஸ்தானில் தற்போது பல மாற்றங்கள் வர ஆரம்பித்துள்ளன. இது நிச்சசயம் வெளிநாடுகளுக்கு விடுக்கப்படும் செய்தியாகவே அமையும். இஸ்லாமாபாத்திலும, லாகூரிலும் பலர் தீவிரவாதம் குறித்து கவலையுடன் பேசுவது அதிகரித்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக அரசும் கூட மெதுவாக மாறி வருவதாகவே நான் உணர்கிறேன். ஒரே நாளில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்றாலும் கூட மெதுவாக, நிதானமாக, உறுதியாக அந்த மாற்றம் வருவது உறுதி' என்கிறார் குகல்மேன்.

ஹக்கானி குரூப்...

ஹக்கானி குரூப்...

பாகிஸ்தானில் பழமைவாதம் ஆழ வேரூண்றியுள்ளது. தீவிரவாத சித்தாந்தங்களையும், வன்முறையைும் ஒடுக்க போதிய அளவில் நடவடிக்கை இல்லை. அதேசமயம், எல்லை தாண்டிய தீவிரவாதத்தையும் பாகிஸ்தான் தடுக்கத் தவறி வருகிறது. மேலும் ஹக்கானி குரூப்பாக இருந்தாலும் சரி லஷ்கர் இ தொய்பாவாக இருந்தாலும் சரி பாகிஸ்தானுக்குள் எந்தத் தாக்குதலையும் நடத்துவதில்லை.

இந்தியாவை எதிர்க்கவில்லை...

இந்தியாவை எதிர்க்கவில்லை...

இந்த நிலையில் குவாத்ரி, பாகிஸ்தான் அரசுக்கும், பாகிஸ்தான் நிர்வாகத்திற்கும் எதிரானவராக இருந்தார். அவர் பாகிஸ்தான் சட்டங்களை விமர்சித்தார். பாகிஸ்தான் ஆளுநரை குறி வைத்தார். பாகிஸ்தான் அரசைக் குறி வைத்தார். அவர் இந்தியாவையோ அல்லது ஆப்கானிஸ்தானையோ எதிர்க்கவில்லை. இதுவும் கவனிப்புக்குரியது.

பாராபட்ச நடவடிக்கை...

பாராபட்ச நடவடிக்கை...

பாகிஸ்தான் அரசிடம் இன்னொரு வழக்கமும் உள்ளது. தனது எதிரி நாட்டை (இந்தியா) விமர்சிப்பவர்களை அது எதிர்ப்பதில்லை. மாறாக அரவணைக்கவே செய்கிறது. பாகிஸ்தான் அரசு உண்மையிலேயே தீவிரவாதத்திற்கு எதிராக செயல்பட விரும்பினால் பாரபட்சம் இல்லாத நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என்கிறார் குகல்மேன்.

English summary
The hanging of Mumtaz Qadri in Pakistan raises one very important question. Is the narrative about terrorism in Pakistan shifting for the better? Mumtaz Qadri, a former police officer who in 2011 assassinated Salman Taseer, the governor of Punjab province. He was hanged recently in Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X