இயற்கைக்கு புறம்பான உறவுக்கு மறுப்பு: கர்ப்பிணியை தாக்கிய காமக்கொடூர கணவன்

By:

மும்பை: மும்பையில் இயற்கைக்கு புறம்பான உறவுக்கு மறுத்ததால் 29 வயது கர்ப்பிணி அவரது கணவரால் தாக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் பூஜா(29)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தனது கணவர் கஜனன் பங்கருடன் மும்பை கல்யாண் பகுதியில் உள்ள ராகவ்நகரில் வசித்து வருகிறார்.

Husband assaults pregnant wife after she says no to unnatural sex

பூஜா கர்ப்பமாக உள்ளார். அவர் கர்ப்பமானதில் இருந்து இயற்கைக்கு புறம்பான முறையில் உறவு கொள்ள அவரது கணவர் வற்புறுத்தி வந்துள்ளார். பூஜா தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கடுப்பான கஜனன் தனது மனைவி கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் அவரது தலையை பிடித்து சுவரில் மோதியுள்ளார். மேலும் அவர் தாக்கியதில் பூஜாவின் தலை மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து பூஜா கஜனனின் சகோதரர் ஓம்பிரகாஷ் மற்றும் சகோதரி பாக்யஸ்ரீயிடம் தெரிவிக்க அவர்களோ அவரை தாக்கியதுடன் ஒழுங்காக அவர் கூறும்படி செய் இல்லை என்றால் அவருக்கு வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்போம் என மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து பூஜா தனது கணவர், அவரது சகோதரர் மற்றும் சகோதரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A 29-year old pregnant woman was assaulted by her husband after she refused to have sex with him in unnatural way.
Please Wait while comments are loading...

Videos