For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சும்மா ரஜினி போல பறந்து பறந்து சண்டை போட்டு அசத்திய பள்ளி மாணவிகள்

By Siva
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள புனித மாஸ் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் வோவினம் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள புனித மாஸ் உயர் நிலையப்பள்ளியில் சிறுபான்மையினர் உரிமை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பள்ளியில் படிக்கும் முஸ்லீம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்றுக் கொடுக்கப்பட்டது.

Hyderabad school girls practise Vovinam

வோவினம் தற்காப்பு கலையை கற்றுக் கொண்ட சிறுமிகள் அதை பள்ளி வளாகத்தில் பயிற்சி செய்து பார்த்தனர். வோவினம் என்பது வியட்நாமைச் சேர்ந்த தற்காப்பு கலை ஆகும். இதை ஆயுதத்துடனும், ஆயுதமில்லாமலும் கற்க முடியும். மனம், உடல் இரண்டுக்குமான பயிற்சி தான் வோவினம்.

Hyderabad school girls practise Vovinam

கராத்தே போன்று வோவினமுக்கும் பெல்ட் முறை உண்டு. இந்த கலையை தோற்றுவித்தவர் வியட்நாமைச் சேர்ந்த நுகுயன் லோக் என்பவர்.

எங்கு பார்த்தாலும் பெண்கள், சிறுமிகளுக்கான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் அவர்கள் தற்காப்பு கலையை கற்றுக் கொள்வது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Muslims girls of St. Maaz high school in Hyderabad learnt Vovinam Martial Arts as part of the self defense programme to mark Minorities Rights Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X