For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசுமாடு எப்படி 'தாயாக' இருக்க முடியும்? நக்வி உட்பட 90% இந்தியர்கள் முட்டாள்கள்: கட்ஜூ காட்டம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மாட்டு இறைச்சி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்ற மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் பேச்சுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடும் காட்டமாக பதிலளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பேசிய நக்வி, மாட்டுக்கறி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தானுக்கு போகலாம் என கூறியிருந்தார். இது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

I am a Hindu, I have eaten beef, and will again eat it: Markandey Katju

இது தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

நான் ஒரு இந்து. நான் மாட்டு இறைச்சி சாப்பிட்டிருக்கிறேன்.. மீண்டும் மாட்டு இறைச்சி சாப்பிடுவேன். மாட்டு இறைச்சி சாப்பிடுவதில் என்ன தவறு?

உலகத்தில் 90% பேர் மாட்டு இறைச்சி சாப்பிடுகின்றனர். அவர்கள் அனைவரும் பாவம் செய்தவர்களா?

I am a Hindu, and I have eaten beef, and will again eat it. There is nothing wrong in beef eating. 90% of the world eats...

Posted by Markandey Katju on Thursday, May 21, 2015

என்னைப் பொறுத்தவரையில் பசுமாடு எப்படி என்னுடைய தாயாக இருக்க முடியும்? ஒரு கால்நடை எப்படி மனிதர்களுக்கு தாயாக இருக்க முடியும்? இதனால்தான் மத்திய அமைச்சர் நக்வி உட்பட 90% இந்தியர்கள் முட்டாள்கள் எனக் கூறுகிறேன்

இவ்வாறு கட்ஜூ கூறியுள்ளார்.

English summary
In an apparent dig at Minister of State for Parliamentary Affairs Mukhtar Abbas Naqvi, former Supreme Court judge Justice Markandey Katju on Friday said that he, being a Hindu, has eaten beef and will continue to eat it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X