For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முழுசா ஜெயலலிதாவாகவே ஆக ஆசை: ஆங்கிலம் கற்க ஆசிரியர் கேட்கும் சசிகலா

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: தனக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என்று சசிகலா நடராஜன் பெங்களூரு சிறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா முதல்வராக திட்டம் போட்ட நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருடன் சேர்ந்து இளவரசி, சுதாகரனும் சிறையில் உள்ளனர்.

ஆங்கிலம்

ஆங்கிலம்

நான்கு ஆண்டுகள் சிறையில் இருக்கும் காலத்தில் உருப்படியாக ஏதாவது செய்ய முடிவு எடுத்துள்ளார் சசி. இதையடுத்து ஆங்கிலம் கற்பது என்று தீர்மானித்துள்ளார்.

சிறை அதிகாரிகள்

சிறை அதிகாரிகள்

எனக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது. ஆசிரியருக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சசிகலா சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளாராம்.

முடிவு

முடிவு

சசிகலாவின் கோரிக்கை குறித்து சிறை அதிகாரிகள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. சசிகலா ஆங்கிலம் கற்றுக் கொள்ள அனுமதிப்பதில் பிரச்சனை இல்லை. அதனால் இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரை போன்றே உடை அணிந்து, சிகையலங்காரத்தை மாற்றியவர் சசிகலா. ஆனால் சசியால் ஜெயலலிதாவை போன்று நுனிநாக்கில் ஆங்கிலம் பேச முடியாது. இந்நிலையில் தான் ஆங்கிலம் கற்க ஆசைப்படுகிறார்.

தமிழ்

தமிழ்

சசிகலாவுக்கு தமிழ் மட்டும் தான் தெரியும். சிறையில் நேரத்தை போக்கவும், நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளவும் தமிழ் செய்தித்தாள்களை மட்டுமே படித்து வருகிறார் சசி.

English summary
Politically irrelevant and out of the thick of action, Sasikala Natarajan has decided to pick up a book and learn how to speak English. Lodged in the Bengaluru central jail after being sentenced to four years imprisonment in the disproportionate assets case, Sasikala has requested jail authorities to provide her an English tutor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X