For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன மழையால் பெங்களூர் நகருக்குள் பாய்ந்த ஏரி நீர்.. சாலைகளில் வலை வீசி மீன் பிடித்த பொதுமக்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் பெய்த பெருமழை காரணமாக, ஏரிகளில் இருந்து வெள்ளம் வெளியே பெருக்கெடுத்து ஓடி வந்ததால் சாலையிலேயே மக்கள் வலை வீசி மீன் பிடித்ததை பார்க்க முடிந்தது.

கடந்த ஒரு வாரமாக, பெங்களூரில் தினமும் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு, விடிய, விடிய மழை பெய்தது.

சுமார் 4 செ.மீ அளவுக்குதான் மழை பெய்த போதிலும், விடாமல் பெய்து கொண்டிருந்தது. இதனால் நகரிலுள்ள பல ஏரிகளில் இருந்தும் தண்ணீர் பெருக்கெடுத்து ஊருக்குள், குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.

மீன், பாம்பு

இதனால் ஏரிகளில் இருந்து மீன், பாம்புகளும் ஊருக்குள் அடித்துக் கொண்டு வந்தன. காலையில் மழை வெறித்த பிறகு, மக்கள் சிலர் வலைகளை கொண்டு சாலைகளில் மீன் பிடிக்க ஆரம்பித்தனர்.

வீடுகளுக்குள் நீர்

வீடுகளுக்குள் நீர்

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் ஒரு பக்கம் அவதிப்பட்ட போதிலும், மறுபக்கம் இந்த நிலையை சாதகமாக்கி மீன் பிடித்தவர்களையும் பார்க்க முடிந்தது.

அதிக பாதிப்பு

அதிக பாதிப்பு

எலக்ட்ரானிக் சிட்டி, எம்ஜிரோடு, இந்திராநகர், பன்னேர்கட்டா சாலை பகுதிகள் வெள்ளத்தாலும், அதனால் ஏற்பட்ட டிராபிக் நெரிசலாலும் அதிகம் பாதிக்கப்பட்டன.

வெள்ளத்தால் பாதிப்பு

பொம்மனஹள்ளி, எலக்ட்ரானிக் சிட்டி போன்ற தெற்கு பெங்களூர் குடியிருப்புகள்தான் அதிகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். இப்பகுதிகளில் தீயணைப்பு துறையினர் படகுகளை பயன்படுத்தி மக்களை மீட்டனர்.

English summary
Incessant overnight rain turned Bengaluru's formidable traffic jams into a horror story, including on roads near Electronics City, which houses Infosys and thousands of IT workers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X