For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போதைப் பொருள்.. குடி .. செக்ஸ் வீடியோ.. கேரளாவை உலுக்கும் "ஹோம்ஸ்டே" குற்றங்கள்!

Google Oneindia Tamil News

கொச்சி: ஆணும் பெண்ணுமாக ரகசியமாக தங்குவது, குடித்து கும்மாளம் போடுவது, செக்ஸில் ஈடுபடுவது, அதை வீடியோவில் பதிவு செய்து வைத்துக் கொண்டு பெண்களை மிரட்டுவது... இது, கேரள காவல்துறைக்குப் புதிய தலைவலியாக மாறி வருகிறது. சமீபத்தில் கொச்சியின், போர்ட் கொச்சி பகுதியில் நடந்த இளம் பெண் கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகே இந்த குற்றச் செயலின் விபரீத விஸ்வரூபம் காவல்துறையை விழித்தெழ வைத்துள்ளது.

இந்த சட்டவிரோத "ஹோம் ஸ்டே" சம்பவங்கள் கேரளாவில் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் போதைப் பொருளும், குடியும் கரைபுரண்டோடுகின்றன. செக்ஸ் இல்லாமல் இவை முடிவதில்லை. பெரும்பாலான ஹோம் ஸ்டே சம்பவங்களில் செக்ஸ் வைத்துக் கொள்வதை ரகசியமாக வீடியோவில் படமாக்கி விடுகிறார்கள்.

பின்னர் இதை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி அவர்களைப் பலருக்கும் விருந்தாக்குகிறார்கள். மறுக்கும் பெண்கள் கும்பலாக பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தப்படுகிறார்கள். அவர்களது வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது. பாலியல் பலாத்கார காட்சியை இன்டர்நெட்டிலும் போட்டு விடும் சம்பவங்களும் நடந்துள்ளதாம்.

போர்ட் கொச்சி சம்பவம்

போர்ட் கொச்சி சம்பவம்

சமீபத்தில் போர்ட் கொச்சி பகுதியில் ஒரு இளம் பெண் கும்பலால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டார். இதையடுத்தே இந்த சட்டவிரோத ஹோம் ஸ்டே செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

முன்னாள் காதலி

முன்னாள் காதலி

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அல்தாப் என்பவரின் முன்னாள் காதலி ஆவார். முன்பு அல்தாப்பும், இந்தப் பெண்ணும் சேர்ந்து தனியாக தங்கியுள்ளனர். ஜாலியாக இருந்துள்ளனர். அதை படம் எடுத்துள்ளார் அல்தாப். அதைக் காட்டி மிரட்டி தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அப்பெண்ணை.

வெளியில் சொன்னால் வீடியோ ரிலீஸ்

வெளியில் சொன்னால் வீடியோ ரிலீஸ்

இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் பலாத்கார காட்சிகளை இன்டர்நெட்டில் போட்டு விடுவதாகவும் இந்தக் கும்பல் அப்பெண்ணை மிரட்டியுள்ளது.

அதிகரிக்கும் அபாயம்

அதிகரிக்கும் அபாயம்

இது ஒரு சம்பவம்தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் வெளிச்சத்திற்கு வராமல் போகும் சம்பவங்கள் நிறைய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளனவாம்.

கண்காணிப்பு இல்லை

கண்காணிப்பு இல்லை

கேரள மாநில சுற்றுலாத்துறையின் அங்கீகாரம் பெற்ற ஹோம்ஸ்டே இல்லங்களில் இதுபோல நடப்பதில்லை. என்றபோதிலும், பலர் சட்டவிரோதமாக ஹோம்ஸ்டே என்று கூறி இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

கொச்சியில் மட்டும் 80க்கும் மேல்

கொச்சியில் மட்டும் 80க்கும் மேல்

கொச்சியில் மட்டும் 80க்கும் மேற்பட்ட சட்டவிரோதமான ஹோம் ஸ்டேக்கள் உள்ளனவாம். மேலும் வீடுகளை வாடகைக்கு எடுத்து அவற்றை ஹோம்ஸ்டே என்ற பெயரில் சட்டவிரோதமாக பலர் நடத்தி வருகின்றனர்.

செக்ஸ்.. போதை.. வீடியோ

செக்ஸ்.. போதை.. வீடியோ

இந்த ஹோம்ஸ்டேக்களில் ஆண்களுடன் தங்க வரும் பெண்கள் பெரும்பாலும் போதைப் பொருள் கொடுக்கப்புகின்றனர். பின்னர் செக்ஸில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவை வீடியோப் படமாக்கப்படுகின்றன. கடைசியில் அவர்களது வாழ்க்கை சீரழிந்து போய் விடுகிறது.

சுற்றுலாத்துறை

சுற்றுலாத்துறை

இதுபோன்ற சட்டவிரோத ஹோம்ஸ்டே மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல்துறை விழிக்கிறதாம். காரணம், இவற்றின் மீது நடவடிக்கை எடுத்தால் அது சுற்றுலாத்துறையைப் பாதிக்கும் என்று சுற்றுலாத்துறை முட்டுக்கட்டை போடுகிறதாம். அதுவும் நடவடிக்கை எடுப்பதில்லையாம். உரிமம் வழங்கும் அனுமதியும் சுற்றுலாத்துறையிடமே இருப்பதால் அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க முடியுமாம்.

லைசென்ஸ் இருந்தால்

லைசென்ஸ் இருந்தால்

இதுபோன்ற ஹோம்ஸ்டேக்களுக்குச் செல்வோர் அவை உரிய உரிமத்துடன் இயங்க வருகின்றனவா என்பதை உறுதி செய்த கொண்ட பின்னர் போவது நல்லது என்று காவல்துறை கூறுகிறது.

ரகசிய காமெராக்கள் ஜாக்கிரதை

ரகசிய காமெராக்கள் ஜாக்கிரதை

பல ஹோம் ஸ்டே இல்லங்களில் ரகசிய காமெராக்களைப் பொருத்தி வைத்து தம்பதிகளின் அந்தரங்களைப் படம் பிடித்து இன்டர்நெட்டில் வெளியிடும் அட்டகாசமும் நடந்து வருகிறதாம்.

முதலில் மிரட்டல்

முதலில் மிரட்டல்

முதலில் சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறார்கள். முடியாதபட்சத்தில் வீடியோவை இன்டர்நெட்டில் போட்டு விடுவார்களாம். இதுபோல வரும் ஜோடிகளில் பலர் கள்ளக்காதலர்கள் அல்லது காதலர்களாக இருப்பதால் அப்பெண்கள் எப்படியாவது சமரசமாகப் போக விரும்புவார்கள் என்பதால் இதுபோன்றவர்களைக் குறி வைத்து வேட்டையாடுகிறதாம் இந்தக் கும்பல்.

புகார் கொடுக்க முன்வர வேண்டும்

புகார் கொடுக்க முன்வர வேண்டும்

இதுகுறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் தினேஷ் கூறுகையில், இதுபோன்ற பிரச்சினையில் சிக்கும்போது தைரியமாக புகார் தர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றவாளிகளைப் பிடிக்க முடியும் என்றார்.

இங்கு போய்ப் பாருங்கள்

இங்கு போய்ப் பாருங்கள்

இந்த விவகாரம் குறித்து கேரள மாநில சுற்றுலாத்துறை மற்றும் ஹோம்ஸ்டே துறைக்கான இயக்குநர் சிவதத்தன் கூறுகையில், மக்கள் ஹோம்ஸ்டேவைத் தேர்வு செய்யும்போது அவை அங்கீகாரம் பெற்றதா என்பதை அறிந்து தேர்வு செய்ய வேண்டும். www.keralatourism.org என்ற இணையதளத்தில் இதுதொடர்பான முழுவிவரங்களும் உள்ளன என்றார்.

English summary
Sex, drugs and video tapes. This is what one can briefly say while speaking of illegal home stays mushrooming in various states and Kerala in particular. The recent gang rape of a woman in Fort Kochi should act as an eye opener to the authorities as investigations have found shocking details.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X