For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்தமில்லாமல் தாக்கிட்டு எவிடென்ஸ் விடாமல் வாங்க: ராணுவ வீரர்களுக்கு அறிவுரை

By Siva
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்று தாக்குதல் நடத்துவது சரி நமது வீரர்களையோ அல்ல அவர்களின் உடல்களையோ விட்டுவிட்டு வர வேண்டாம் என்று ராணுவ வீரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் புதன்கிழமை இரவு எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அங்கிருந்த 7 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தன.

இதையடுத்து இந்திய மக்கள் ராணுவ வீரர்களை பாராட்டி கொண்டாடி வருகிறார்கள்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் மலைகள், காடுகள் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் 2 கிலோமீட்டர் வரை சென்று 7 தீவிரவாத முகாம்களை தாக்கியது. ஒவ்வொரு முகாம்களிலும் 30 முதல் 40 தீவிரவாதிகள் இருந்துள்ளனர்.

தீவிரவாதிகள்

தீவிரவாதிகள்

தரைப்படை மற்றும் ஹெலிகாப்டரில் இருந்து பாரா கமாண்டோக்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் செல்ல புதன்கிழமை மதியமே வீரர்கள் கிளம்பிவிட்டனர்.

தடம்

தடம்

தாக்குதல் நடத்த செல்வது சரி நமது வீரர்களையோ அல்ல அவர்களின் உடல்களையோ விட்டுவிட்டு வர வேண்டாம் என்று ராணுவ வீரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஆதாரம்

ஆதாரம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உரிய நேரத்தில் ஆதாரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர்

காஷ்மீர்

அந்த 7 தீவிரவாத முகாம்களில் இருந்த தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஒரு வாரமாக கண்காணித்து வந்துள்ளது.

இந்திய ராணுவம்

இந்திய ராணுவம்

எல்லை தாண்டி தாக்குதல் நடத்த சென்ற வீரர்கள் அனைவரும் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் சிறு கீறலின்றி திரும்பி வந்துள்ளனர் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

English summary
Indian army men who carried out surgical strike was advised not to leave buddies or bodies behind in Pakistan occupied Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X