For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அணை கட்ட யு.எஸ் முதலீடு செய்ய வேண்டாம்: இந்தியா வலியுறுத்தல்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அணை கட்டுவதற்கு அமெரிக்கா முதலீடு செய்ய வேண்டாம் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்ச்சைக்குரிய கில்கிட்-பல்திஸ்தான் பகுதியில் அணை கட்டும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த பகுதி இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சர்ச்சைக்குரிய பகுதியாகும்.

இந்த பகுதி ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீரின் ஒரு அங்கம். காஷ்மீர் மகாராஜா, இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைத்த போது இந்த பகுதி இந்தியாவுடன் இருந்தது.

இப்படி சர்ச்சைக்குரிய பகுதியில் 4,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான அணைக் கட்டுத் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. இதற்கு பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும் உதவி செய்ய முன்வந்துள்ளது.

தற்போது அமெரிக்கா இப்படி உதவி செய்ய முன்வந்திருப்பதற்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய பகுதியில் அமெரிக்கா முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

English summary
India has asked the United States not to invest in the Diamer-Bhasha dam project, which Pakistan plans to build in disputed Gilgit-Baltistan in Pak Occupied Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X