ஜாதவ் மரண தண்டனை விவகாரம்.. பாகிஸ்தானிடமிருந்து தீர்ப்பு நகலை கோரும் இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குல்பூஷன் யாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையின் தீர்ப்பின் நகலை இந்தியாை கோரியுள்ளது.

இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக பிடிபட்டார். பின்னர் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். இந்நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

India demands death sentence judgment of Kulbhushan Jadhav from Pakistan

இதற்கு இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதுபோன்று அப்பாவி மீது பழி சுமத்தி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் பாகிஸ்தானுடனான நல்லுறவில் விரிசல் ஏற்படும் என்றும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

எதையும் எதிர்கொள்ள தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதிலடிக் கொடுத்தார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் கட்சி பேதமின்றி எழுப்பப்பட்டது.

இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக ஜாதவ் மேல் முறையீடு செய்ய மேலும் 60 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குல்பூஷன் ஜாதவ் எங்கு சிறை வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை இந்தியாவிடம் தெரிவிக்க பாகிஸ்தான் மறுத்து விட்டது. தூதரகம் வாயிலாக ஜாதவை மீட்க இந்தியா 13 முறை விடுத்த கோரிக்கையையும் ஏற்க மறுத்துள்ளது.

இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர் கௌதம் பாம்பவாலே, பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் தேமினா ஜன்ஜூவாவை சந்தித்து ஜாதவ் மீதான குற்றப்பத்திரிகை மற்றும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல்களை தரும்படி கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கில் சட்டப்பூர்வமான உதவிகள் செய்து ஜாதவை மீட்கவும், அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும் இந்தியா உதவ தயாராக உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
India sought copies of the charge-sheet against former Indian Navy officer Kulbhushan Jadhav and the judgment of the Pakistani military court that sentenced him to death.
Please Wait while comments are loading...