For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"மூஞ்சி புக்"கை அதிகம் பார்ப்போர் பட்டியலில் 2வது இடத்தில் இந்தியா

Google Oneindia Tamil News

டெல்லி: பேஸ்புக் பயன்படுத்துவோர் அதிகம் உள்ள நாடுகளில் 2 வது இடத்தை பிடித்துள்ளது இந்தியா.

சமூக தளங்களில் முதல் நிலையில் இருக்கும் இணையதளம் பேஸ்புக். தற்போது வரை 800 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது பேஸ்புக். இந்தியர்களிடையே பேஸ்புக் தளம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகளவில் பேஸ்புக் உபயோகத்தில் இந்தியா 2 வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்தோனேசியாவை வீழ்த்தி இந்த இடத்தை அடைந்துள்ளது இந்தியா

India got 2nd place in Facebook users

போர்ப்ஸ் தளத்தின் தகவல் படி 6 ஆவது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்தியா. கடந்த பிப்ரவரி 2012 கணக்கெடுப்பின் படி இந்தோனேசிய பயனர்களின் எண்ணிக்கை 43,060,360, இந்தியா பயனர்களின் எண்ணிக்கை 43,497,980 பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தான் யுகேவிடம் இருந்து இரண்டாவது இடத்தை தட்டி பறித்தது இந்தோனேசியா. ஆனால் மூன்றே மாதத்தில் இழந்தது.

தற்போதைய நிலவரப்படி பேஸ்புக் உபயோகத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், இந்தோனேசியா மூன்றாவது இடத்திலும், பிரேசில் நான்காவது இடத்திலும் வெற்றி நடை போடுகின்றன.

கடந்த 6 மாதத்தில் மட்டும் இந்தியாவில் 1 கோடியே 30 லட்சம் பேர் புதிதாக பேஸ்புக்கில் இணைந்துள்ளனர். இதன் மூலம் சர்வதேச அளவில் பேஸ்புக் பயன்படுத்துவோர் அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது.

செல்போனில் 2ஜி இணையதள சேவையிலும் பேஸ்புக்கை எளிதாக பயன்படுத்தும் பேஸ்புக் லைட் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம். இந்தியாவில் செல்போன் மூலம் பேஸ்புக்கை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

English summary
facebook continues in 2nd palace in Facebook users numbers. Indonesia in 3rd and brazil in 4th place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X