For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

121 கோடி இந்தியர்களில் நீங்களும் ஒருவர்.. சென்சஸ் கூறும் சுவாரஸ்ய தகவல்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய மக்கள் தொகை 2011 சென்சஸ் கணக்குப்படி 121 கோடியே 5 லட்சத்து 69 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது.

2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியே சொச்சமாகும்.

வழக்கம் போல நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில்தான் மக்கள் தொகை அதிகம் உள்ளது. அதேபோல பெண்களை விட ஆண்களே அதிகம் உள்ளனர்.

ஆண்களே அதிகம்

ஆண்களே அதிகம்

இந்தியாவில் பெண்களை விட ஆண்களே அதிகம் உள்ளனர். ஆண்களின் எண்ணிக்கை 62,31,21,843 ஆகும். பெண்களின் எண்ணிக்கை 58,74,47,730 ஆகும்.

கிராமப்புற மக்களே அதிகம்

கிராமப்புற மக்களே அதிகம்

அதேசமயம், நகர்ப்புற மக்கள் தொகையை விட கிராமப்புற மக்கள்தான் இந்தியாவில் அதிகம். இந்தியாவின் ஊரக மக்கள் தொகை 83,34,63,448. நகர்ப்புற மக்கள் தொகை 37,71,06,125 ஆகும்.

நகரத்தில் ஆணாதிக்கம்

நகரத்தில் ஆணாதிக்கம்

இந்திய நகர்ப்புறங்களில் பெண்களை விட ஆண்களே அதிகம உள்ளனர். அதாவது ஆண்களின் எண்ணிக்கை 19,54,89,200. பெண்களின் எண்ணிக்கை 18,16,16,925.

கிராமங்களிலும் ஆண்களே

கிராமங்களிலும் ஆண்களே

ஊரகப் பகுதிகளிலும் ஆண்களே அதிகம். 42,76,32,643 ஆண்கள் கிராமப்புறங்களில் உள்ளனர். பெண்களின் எண்ணிக்கை 40,58,30,805 ஆகும்.

சதுர கிலோமீட்டருக்கு 382 பேர்

சதுர கிலோமீட்டருக்கு 382 பேர்

இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தியானது, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 382 பேராக உள்ளது.

பெண்களுக்குப் பஞ்சம்

பெண்களுக்குப் பஞ்சம்

பாலினி விகிதாச்சாரம் கவலைக்குரியதாகவே உள்ளது. அதாவது 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் என்ற நிலையில்தான் உள்ளது. இது ஊரகப் பகுதிகளில் பரவாயில்லை. அதாவது 1000 பேருக்கு 949 ஆக உள்ளது. நகரப் பகுதிகளில் மோசமாக உள்ளது. அங்கு 929 ஆக உள்ளது.

சிறார்கள் எண்ணிக்கை

சிறார்கள் எண்ணிக்கை

இந்தியாவில் 6 வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை 16,44,78,150 ஆகும். அதில் ஆண்களின் எண்ணிக்கை 8,57,32,470. பெண்களின் எண்ணிக்கை 7,87,45,680.

கிராமம்- நகரம்

கிராமம்- நகரம்

6 வயதுக்குட்பட்ட ஊரகக் குழந்தைகளின் எண்ணிக்கை 12,12,85,762. அதுவே நகர்ப்புற குழந்தைகளின் எண்ணிக்கை 4,31,92,388 ஆகும்.

கிராமங்களில் பாலின விகிதம்

கிராமங்களில் பாலின விகிதம்

6 வயது வரையிலான ஊரகக் குழந்தைகள் மத்தியில் பாலின விகிதமானது 923 ஆக உள்ளது. அதுவே நகர்ப்புறத்தில் 905 என்ற மோசமான நிலையில் உள்ளது.

இந்தியாவின் கல்வியறிவு

இந்தியாவின் கல்வியறிவு

இந்தியாவில் 7 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மத்தியில் கல்வியறிவானது 57.93 சதவீதமாக உள்ளது. மொத்த கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை, 76,34,98,517 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 43,46,83,779 ஆகும். பெண்கள் எண்ணிக்கை 32,88,14,738 ஆகும்.

கிராமங்கள் பெட்டர்

கிராமங்கள் பெட்டர்

ஊரகப் பகுதிகளில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 48,26,53,540. நகர்ப்புற எண்ணிக்கை 28,08,44,977.

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர்த்து

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர்த்து

சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதியான 5180 சதுர கிலோமீட்டர் மற்றும் சட்டவிரோதமாக சீனாவுக்கு பாகிஸ்தான் தாரை வாரத்துக் கொடுத்த இந்தியப் பகுதியான 37,555 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் தவிர்த்து மீதமுள்ள 78,11 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான இந்தியப் பகுதியில் சென்சஸ் எடுக்கப்பட்டுள்ளது.

English summary
India's population is more than 121 cr according to the census 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X