For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லையில் ராணுவத்தை குவிக்கும் இந்தியா-பாகிஸ்தான்.. தொடர்கிறது போர் பதற்றம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்களை பறக்கவிட்டுள்ளதாக தகவல் வெளியானதால் பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், "இந்திய எல்லை பிராந்தியத்தில் சியாச்சென் அல்லது பிற இடங்களில் பாக்கிஸ்தான் விமானம் எந்த வான்வெளி மீறலிலும் ஈடுபடவில்லை," என்று ஒரு இந்திய விமானப்படை அதிகாரி நேற்று தெரிவித்தார்.

India, Pakistan maintain high operational military readiness along LoC

இந்திய துருப்புக்கள், சியாச்சோ ரிட்ஜ் பிராந்தியத்தில் 16,000 முதல் 22,000 அடி வரை, கட்டுக்குள் வைத்துள்ளன. "பாகிஸ்தான் ராணுவம்-ஐ.எஸ்.ஐ. ஒருங்கிணைந்த ஆதரவுடன் பனி மலை பகுதிகளில் ஊடுருவல் முயற்சிகள் செய்கின்றன. இதனால் பனி உருகுவது அதிகரித்து வருகின்றன" என்று ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

நேற்று, சகர்டு விமானப்படை தளத்திற்கு வருகை தந்த, பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி சோஹைல் அமன் இவ்வாறு குறிப்பிட்டார்: "பாகிஸ்தான் தேசத்தின் எதிரிகளின் (இந்தியா) அறிக்கையைப் பற்றி கவலைப்படக்கூடாது ... நாங்கள் சமாதானத்தை விரும்பும் மக்கள், ஆனால் அச்சுறுத்தல் வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் எல்லா விதமான சவால்களும், எந்த ஆக்கிரமிப்பிற்கும் பதிலடி தருவோம். அதை அவர்கள் வருங்கால தலைமுறை கூட மறக்காது" என மிரட்டும் தொனியில் பேசினார்.

செவ்வாயன்று இந்திய ராணுவம் முதன் முறையாக, மே மாதம் 9-ம் தேதி நஷ்ஷே நிலைகளில் பாக்கிஸ்தான் ராணுவ ஊடுருவலை முறியடித்த வீடியோவை வெளியிட்டது. இதன்பிறகு சுமார் ஐந்து மணி நேரம் கழித்து, பாகிஸ்தான் ராணுவமும் மே மாதம் 13 ஆம் தேதி இந்திய ராணுவ நிலைகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோவை வெளியிட்டது.

English summary
Both India and Pakistan continue to maintain high operational military readiness along the volatile Line of Control (loC).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X