For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போருக்குத் தயாராக இருங்கள்.. வீரர்களுக்கு ராணுவ தலைமைத் தளபதி எச்சரிக்கை

எல்லையில் பணியாற்றும் வீரர்கள் எப்போது போர் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: நம் நாட்டுக்கு போர் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. எனவே, எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் எல்லையில் பணியாற்றும் வீரர்கள் எப்போது போர் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராணுவ தொலைத்தொடர்பு பற்றிய 2 நாள் கருத்தரங்கு டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராணுவத் தளபதி பிபின் ராவத் பேசுகையில், நம் நாட்டுக்கு போர் அச்சுறுத்தல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. எனவே, எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும்வகையில் எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

India will continue to face conventional or non-traditional forms of warfare,Rawat

மேலும் அவர் பேசியதாவது: ராணுவத்தில், நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் புகுத்த வேண்டும். ராணுவத்துக்கு தேவையான ஆயுதக் கொள்முதல் செய்வதற்குத் தேவையான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும்.

ராணுவத்துக்கு தேவையான தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் எளிமையாக, குறைவான எடை கொண்டதாக, சுலபமாக பராமரிக்கும் வகையில் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பம் எந்த ஒரு தட்பவெப்ப சூழ்நிலையிலும் இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

சமூக வலைதளங்களை எதிரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே, ராணுவத்தினர் இடையிலான தொலைபேசி உரையாடல் மற்றும் தரவு பரிமாற்ற நடைமுறையை பாதுகாப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

English summary
Rawat said India will continue to face conventional or non-traditional forms of warfare and the armed forces will have to be ready to deal with any such challenge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X