For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவாவில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட இந்தியா, பிரான்ஸ் கடற்படை

By Siva
Google Oneindia Tamil News

பனாஜி: இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படை கூட்டுப் பயிற்சியான வருணா கடந்த 2ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படைகள் கடந்த 1983ம் ஆண்டில் இருந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 13 முறை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த கூட்டுப் பயிற்சிக்கு கடந்த 2001ம் ஆண்டு வருணா என்று பெயர் வைக்கப்பட்டது.

Indo-French naval exercise Varuna ends in Goa

கூட்டுப் பயிற்சியின் 14வது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி கோவாவில் துவங்கியது. பயிற்சியில் பிரான்சை சேர்ந்த 4 கப்பல்கள் கலந்து கொண்டன. கூட்டுப் பயிற்சியின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வெளிப்படுகிறது என்று இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Indo-French naval exercise Varuna ends in Goa

பிரான்சை சேர்ந்த தஸால்ட் ஏவியேஷனிடம் இருந்து இந்தியா 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதால் இருநாட்டு உறவு மேலும் பலப்பட்டுள்ளது.

Indo-French naval exercise Varuna ends in Goa

கூட்டுப் பயிற்சியின்போது இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ் விராட், ஐஎன்ஸ் மும்பை உள்ளிட்ட கப்பல்களும், ஷங்குல் நீர்மூழ்கி கப்பலும் பங்கேற்றன. மேலும் சீ ஹாரியர்ஸ், பி-8ஐ மற்றும் டோர்னியர் விமானங்களும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. கூட்டுப்பயிற்சி கடந்த 2ம் தேதி நிறைவடைந்தது.

Indo-French naval exercise Varuna ends in Goa

இது குறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

இரு நாட்டு கடற்படைகளின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது தான் வருணா கூட்டுப் பயிற்சியின் முக்கிய நோக்கம் என்றார்.

English summary
The 14th edition of Indo-French naval exercise Varuna concluded in Goa on may 2nd. The exercise which began on April 23 saw the participation of four French naval ships.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X