For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய பெருங்கடலில் இனிமேல் இந்திய-அமெரிக்க ஆதிக்கம்தான்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய பெருங்கடலில் பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா-அமெரிக்கா இணைந்து செய்துள்ள ஒப்பந்தம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் பிரதமர் நரேந்திரமோடி இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாட்டு தலைவர்களும், தீவிரவாதத்தை முறியடிக்கும் விவகாரத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசிக் கொண்டனர்.

கடல்சார் பாதுகாப்பு

கடல்சார் பாதுகாப்பு

பல காரணங்களால், கடல் பாதுகாப்பில் உள்ள முக்கியத்துவத்தை இரு நாடுகளுமே உணர்ந்துள்ளதாக தெரிகிறது. எனவே கடல் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

மின்சார சப்ளை

மின்சார சப்ளை

உலகின் மின்சார சப்ளையில், ஐந்தில் ஒரு பங்கு, இந்திய பெருங்கடல் வழியாகவே நடக்கிறது. எனவே இந்த வழித்தடத்தில் கப்பல்களுக்கு பாதுகாப்பை அதிகரிப்பது, இந்தியா-அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்குமே மிக அவசியமாக உள்ளது.

மீட்பு நடவடிக்கை

மீட்பு நடவடிக்கை

கடல்கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களை பாதுகாப்பது, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளில் இந்தியா-அமெரிக்கா இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் ஒழிப்பு

தீவிரவாதிகள் ஒழிப்பு

தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவிய சம்பவத்தை இந்தியா எதிர்கொண்டுள்ளது. எனவே தீவிரவாதிகளை கண்காணிக்கவும், இவ்விரு நாடுகளும் இணைந்து பணியாற்ற உள்ளன.

English summary
Enhanced cooperation on maritime security was one of the key aspects that was discussed between Prime Minister Narendra Modi and President of the United States of America, Barack Obama. Both countries realize the need to have better cooperation where maritime security is concerned
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X