For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொசாம்பிக் நாட்டு துறை முகத்தில் இந்திய கப்பல் நிலை நிறுத்தம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய கடற்படை கப்பல் டெக், மொசாம்பீக் நாட்டில் நட்புமுறையாக நிறுத்தப்பட்டுள்ளது.

INS Teg visits Nacala, Mozambique

இதுகுறித்து கடற்படை செய்தித்தொடர்பாளர் கேப்டன் ஷர்மா கூறுகையில், இரு நாடுகளுக்கு நடுவேயுள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் நமது கப்பல் மொசாம்பீக் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் நடுவே நீண்ட காலமாக நல்ல உறவு இருந்து வருகிறது. 35 நாடுகளை உறுப்பினராக கொண்ட இந்திய பெருங்கடல் கடற்படை கூட்டமைப்பில் மொசாம்பீக்கும் ஒரு நாடாகும்" என்றார்.

இந்திய பெருங்கடல் பகுதி நாடுகளுடன் இந்தியாவின் உறவை பலப்படுத்தும் ஒரு முயற்சிதான் இது என்று ஒரு அதிகாரி கூறினார். மொசாம்பீக் நாட்டின் நாகாலா துறைமுகத்தில் நிற்கும் இந்திய கப்பலை அந்த நாட்டு அதிகாரிகள் சுற்றிப் பார்த்து வருகின்றனர். வழக்கமாக இக்கப்பல் மும்பை துறை முகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Indian Naval Ship Teg, a stealth frigate of the Indian Navy, made a port call at Nacala, Mozambique on Monday. Navy Spokesperson Capt D K Sharma said that the ship is on a goodwill visit aimed at strengthening the existing bonds of friendship between the two nations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X