For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 5 ஊழியர்கள் ரயில் மோதி சாவு! பனி மூட்டத்தால் பரிதாபம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநிலம், ரோடாஸ் மாவட்டத்தில் உள்ள கம்ஹாவ் ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள தண்டவாளங்களை பராமரிக்கும் பணியில் சில ஊழியர்கள் இன்று ஈடுபட்டனர்.

அப்போது, பிற்பகல் 12.30 மணியளவில் அந்த தண்டவாளத்தின் வழியாக அஜ்மீர்-சீல்டா எக்ஸ்பிரஸ் (12988) வேகமாக வந்ததுள்ளது. ஆனால் பராமரிப்பு பணியில் ஈடுபட்டவர்களால் கடுமையான பனிமூட்டம் காரணமாக ரயில் வந்ததை கவனிக்க முடியவில்லை.

Inspector, 4 labourers run over during track maintenance

மின்னல் வேகத்தில் அந்த ஊழியர்கள் மீது ரயில் மோதியதில் ரெயில் பாதைகளை ஆய்வு செய்யும் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஏற்கனவே அந்த ரயில் சுமார் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், அந்த பாதை வழியாக வேறு எந்த ரயிலும் வராது என்ற கணிப்பில் இவர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த கொடூர விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து துறைசார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

English summary
A speeding train on Saturday ran over five rail maintenance staff, including an inspector, near Kamhau railway station under Mughalsarai division of ECR in Bihar’s Rohtas district, an official said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X