For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதலீடு 60 முறை, வளர்ச்சி 27 முறை: அருண்ஜெட்லி உரை ஸ்பெசல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: 2015-16ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை லோக்சபாவில் தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி ‘முதலீடு' ('Investment') என்ற வார்த்தையை சுமார் 60 முறை பயன்படுத்தினார்.

அதே போல் மோடி அரசின் தாரக மந்திரமான ‘வளர்ச்சி' (growth) என்ற வார்த்தையை சுமார் 27 முறை பயன்படுத்தினார்.

ஜூலை 2014-இல் பட்ஜெட் உரையில் அருண் ஜெட்லி ‘முதலீடு' என்ற வார்த்தையை சுமார் 34 முறை பயன்படுத்தியிருந்தார்.

Investment’, ‘ease of doing business’ rank high in Jaitleyspeak

ரொம்ப சுலபம்

அதேபோல் உரையில் இடையிடையே ‘ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்' அதாவது 'வர்த்தகம் செய்ய சுலபம்' என்ற சொற்றொடரையும் அவர் அடிக்கடி பயன்படுத்தினார். குறைந்தது 10 இடங்களிலாவது இதனை அவர் பயன்படுத்தியிருப்பார்.

முதலீடுதான் அதிகம்

ஆனால் இன்றைய இணைய உலகில் கூறப்படும் கீ வார்த்தை சொல்லாக முதலீடு என்ற சொல்லே ஜெட்லியின் உரையில் ஆதிக்கம் செலுத்தியது.

அடிக்கடி வந்தவை

இது தவிர, ‘வளர்ச்சி', ‘உள்கட்டமைப்பு', 'அயல்நாட்டு முதலீடுகள்' போன்ற வார்த்தைகளும் இவரது இன்றைய உரையில் மீண்டும் மீண்டும் வந்தவண்ணம் இருந்தன.

உலக வங்கி

வர்த்தம் செய்ய சுலபமான நாடுகள் என்ற உலக வங்கியின் தரவரிசைப் பட்டியலில் 189 நாடுகளில் இந்தியா மிகவும் தாழ்வான 142-வது இடத்தையே பிடித்திருந்தது. இதனையடுத்தே அருண் ஜெட்லி 'ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்' என்ற வார்த்தைக்கு பட்ஜெட் உரையில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வளர்ச்சி பின்னடைவு

முதலீடு என்ற வார்த்தையை 60 முறை ஜெட்லி பயன்படுத்தினாலும் கடந்த பட்ஜெட்டில் 34 முறை பயன்படுத்திய ‘வளர்ச்சி' என்ற வார்த்தை இம்முறை 27 முறையாக பின்னடைவு கண்டது.

ப.சி எப்படி?

இதற்கு முன்னதாக, ப.சிதம்பரம் பிப்ரவரி 2014-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் போது 'வளர்ச்சி' என்ற வார்த்தையை 32 முறை பயன்படுத்தினார். ஆனால் ‘முதலீடு' அவரால் 11 முறையே பயன்படுத்தப்பட்டது.

நெருக்கடி இல்லை

வேலைகள், திறமைகள், இளையோர், கார்ப்பரேட், ஏழை போன்ற வார்த்தைகள் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டன. ஆனால் ‘நெருக்கடி' (Crisis) என்ற வார்த்தை இம்முறை ஜெட்லியின் உரையில் இடம்பெறவில்லை.

ஜெட்லி பயன்படுத்திய இந்த முக்கிய வார்த்தைகளைக் கொண்டு பார்த்தால் பாஜக பட்ஜெட் எதை, யாரை நோக்கியது என்று புரிந்து கொள்ளலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

English summary
India may rank poorly on “ease of doing business”, but it emerged as a high-focus area in Finance Minister Arun Jaitley”s first full-fledged Budget on Saturday, literally, with as many as 10 mentions. However, the biggest focus area turned out to be “investment” when it comes to usage of keywords in the speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X