For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களே எனது எஜமானர்கள்.. ஊழலை ஒழிக்க நினைப்பது ஒரு குற்றமா? மோடி ஆவேச பேச்சு #Moradabad

By Veera Kumar
Google Oneindia Tamil News

மொராதாபாத்: ஊழலை எதிர்த்து போராடுவது ஒரு குற்றமா என கேள்வி எழுப்பியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் இன்று மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி கூறியதாவது:

எனக்கு மக்கள்தான் உயர் அதிகாரிகள். மக்களுக்கு மட்டுமே நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன், வேறு யாருக்கும் கிடையாது.

Is fighting corruption a crime? ask Modi

ஏழ்மையை ஒழிக்க வேண்டுமானால், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் போன்ற பெரிய மாநிலங்களில் வளர்ச்சி அவசியம். நான் எம்.பியாக வேண்டும் என்பதற்காக உத்தரபிரதேசத்தில் களமிறங்கி போராடவில்லை. வறுமைக்கு எதிராகவே எனது போராட்டம் அமைந்தது.

நான் பதவிக்கு வந்ததுமே, எனது அதிகாரிகளிடம் கேட்டது, ஏன் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகியும் நமது கிராமங்கள் பலவற்றுக்கு மின்வசதி கூட போய் சேரவில்லை என்பதைத்தான். நான் செங்கோட்டையில் நின்றபடி கொடுத்த வாக்குறுதிப்படி, ஆயிரம் நாட்களுக்குள், மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு மின் இணைப்பை கொடுத்துவிடுவேன்.

பல அரசுகள் வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து வந்தன. ஆனால் நாங்கள்தான் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கிறோம்.

ஊழல்களை அதன் வழியிலேயே விட முடியாது. அதை தடுத்தாக வேண்டும். எனது சொந்த நாட்டிலேயே என்னை சிலர் குற்றம்சாட்டுவதை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. இத்தனை வருடங்களாக மக்களின் செல்வங்களை சாப்பிட்டு வாழ்ந்தவர்களை கணக்கிற்கு கீழே கொண்டுவர நான் எடுத்த முயற்சிகள் குற்றமா? ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைக்காக ஏன் என்னை தவறானவனாக சித்தரிக்க வேண்டும்?

கருப்பு பணத்தை குவித்து வைத்திருந்தவர்கள் இப்போது ஏழைகள் வாசலில் கியூவில் நின்று அதை வெள்ளையாக்கி தாருங்கள் என கெஞ்சிக் கொண்டுள்ளனர். சில இடங்களில் ஏழைகளின் கால்களில் விழுந்து கூட கெஞ்சும் தகவல் கிடைத்துள்ளது. இந்த நாட்டில் முன்பு எப்போதாவது ஏழைகளை பணக்காரர்கள் கெஞ்சி கூத்தாடிய சரித்திரம் உண்டா? இப்போது உரக்க சொல்லுங்கள், உண்மையிலேயே இதுதான் ஏழைகளுக்கான அரசு என்பதை.

ஏழை எளியவர்களுக்கான ஜன்தன் வங்கி கணக்கை பயன்படுத்தி கறுப்பு பணத்தை வெள்ளையாக்க முயல்வோரை கம்பி எண்ண வைக்க தேவையான நடவடிக்கைகளை நான் எடுக்கப்போகிறேன். இப்போது நாடே, மோடி, மோடி என்கிறது. ஏனெனில் இந்த நாடு ஊழலுக்கு எதிரானது. ஆனால், ஊழலை ஒழிக்க முடியாமல் தடுமாறி வந்தது. இப்போது எப்படியாவது ஊழலை ஒழிக்க வேண்டும் என மக்கள் முழு வீச்சில் விரும்ப ஆரம்பித்துள்ளார்கள். நான் உங்களுக்கு வாக்குறுதியளிக்கிறேன். நீங்கள் படும் கஷ்டங்களுக்கும், செய்யும் தியாகங்களுக்கும் உரிய பலன் விரைவில் உங்களை வந்து சேரும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.

English summary
Why should I not fight corruption? Is fighting corruption a crime? Why are some people calling me a wrong doer for fighting corruption, Prime Minister Narendra Modi asked at the Parivartan rally in Moradabad, Uttar Pradesh. The people are my high command and I am answerable only to you, the PM further went on to state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X