For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சக்தி இழக்கிறதா மோடி மந்திரம்?

By BBC News தமிழ்
|
நரேந்திர மோடி
Getty Images
நரேந்திர மோடி

2014ஆம் ஆண்டு தேர்தலை வரலாற்று சிறப்புமிக்க வகையில் நரேந்திர மோடியால் வெற்றிபெற முடிந்ததற்கான காரணம், அவரின் போர்கோலம் கொண்ட சிறப்பான பேச்சாற்றல்தான். மூன்று ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் தற்போது மிகவும் தற்காத்துக்கொள்ளும் வகையில் பேசத் துவங்கியுள்ளார்.

மோடியில், கடல் அலையைப் போல ஒலிக்கக்கூடிய ஆரவாரமான பேச்சின் சக்தி குறைய ஆரம்பித்துள்ளதாக பலர் கூறத் துவங்கியுள்ளனர்.

சமீபத்தில் அவர் ஆற்றிய உரைகளில் கூட, தன்னை விமர்சிப்பவர்களை, பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்கக் கூடியவர்கள் என்றும், நாட்டின் நலிந்த பொருளாதாரத்திற்கு, முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ்தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.

தன்னை ஒரு மூன்றாவது மனிதன் போல சித்தரித்துக்கொள்ளும் அவர், நாட்டின் நலனுக்காக, விஷம் கூட குடிப்பேன் என்று கூறியுள்ளார். வெற்றி பெற்றவர் பாதிக்கப்பட்டவராகிவிட்டாரா?

பல நிறுவனங்களின் செயலாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒரு சிறிய அளவிலான மக்கள் நம்மை பலவீனமாக்குகிறார்கள். அவர்களை நாம் அடையாளம் காணவேண்டிய தேவை உள்ளது என்றார்.

மோடி மந்திரத்தின் சக்தியை இழக்கத் துவங்கியுள்ளாரா பிரதமர்?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிபெற்ற போது, பல்வேறு சிர்திருத்தங்களையும், வேலைவாய்ப்புகளையும் அவர் உறுதிமொழியாக அளித்தார்.

உலக பொருளாதாரம் நல்ல முறையில் முன்னேற்றதை காணும் நேரத்தில், மோடியின் தலைமைக்குகீழ், இந்தியா மந்தமடைந்துவரும் பொருளாதாரத்தையும், வேலையின்மையையும் சமாளிக்க போராடி வருகிறது.

மலைபோல குவிந்துள்ள கடன்களுடன் வங்கிகள் போராடிவருவதால், உள்நாட்டு முதலீடு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் தரைமட்டமாகியுள்ளது என்கிறார் பொருளாதார நிபுணர் பிரவீன் சக்கிரவர்த்தி.

இதற்கு, பிரதமரின் விளக்கங்கள் மிகவும் குழப்பமானதாக உள்ளன. கடந்த நவம்பர் மாதம் நடந்த சர்ச்சைக்குரிய பண மதிப்பிழப்பு என்பது, நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள சட்டவிரோதமான பொருளாதரத்திற்கு எதிராகவும், இருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்தியாவை பொது சந்தையை நோக்கி இட்டுச்செல்லவேண்டிய, புகழ்பெற்ற ஜி.எஸ்.டி வரியும், திட்டமிடப்படாத அமல்படுத்துதலால், வியாபாரத்திற்கு இடையூறாகவே பரவலாக பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி மூலமாக வரித்துறையின் அதிகாரத்துவத்தைக் கண்டு, நகரங்களில் உள்ள பல வியாபாரிகள் வருத்தத்தில் உள்ளனர். கிராமங்களில் கிட்டத்தட்ட பாதி இந்தியர்கள் விவசாயம் செய்கின்றனர்.

தங்களின் உற்பத்தி பொருளுக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்று நம்பும் அவர்கள் ஊதிய பாதுகாப்பின்மை குறித்து புகார் தெரிவிக்கின்றனர்.

சவால் இல்லை

தேர்தல் வெற்றிக்குப் பிறகு, முதல்முறையாக பாஜக அரசு தாக்கப்படுகிறது.

பாஜகவின் மூத்த அரசியல்வாதி ஒருவர், நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு தன் கட்சியின் ஆட்சியே காரணம் என சமீபத்தில் குற்றம் சாட்டினார்.

வறுமையை மிக அருகில் இருந்து பார்த்தவர் என தன்னை கூறிக்கொள்கிறார் பிரதமர். அவரின் நிதியமைச்சரோ, அனைத்து இந்தியர்களும் பிரதமரை போலவே, வறுமையை மிக அருகில் பார்க்க வேண்டும் என்பதற்காக அதிக நேரம் உழைக்கிறார் என்று முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா எழுதியுள்ளார்.

ஒரு மாறுதலுக்கு, மோடி அரசு எதிர்கட்சிகளாலும் விமர்சிக்கப்படுகிறது. காங்கிரஸின் முக்கிய தலைவரான ராகுல்காந்தி, எப்போதுமில்லாத புத்துணர்ச்சியோடு, மோடி குறித்து மிகவும் ஆக்ரோஷமாக பேசுகிறார்.

அமித் ஷாவுடன் நரேந்திர மோடி
Getty Images
அமித் ஷாவுடன் நரேந்திர மோடி

கூடுதலாக, மோடியின் நெருங்கிய கூட்டளியான அமித் ஷாவின் மகன் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஜெய் ஷா, இதுகுறித்து செய்தி வெளியிட்ட தி வையர் பத்திரிக்கையின் மீது வழக்கு தொடருவேன் என்று மிரட்டியுள்ளார்.

பதவியேற்றது முதல், ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத நான்கு விஷயங்கள் மோடிக்கு உதவி செய்து வருகின்றன.

குறைந்த எண்ணெய் விலை - இந்தியா பெரும்பாலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதுவே இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, பணவீக்கம் குறையவும் செய்கிறது.

உள்ளூர் ஊடகங்கள் - பல உள்ளூர் ஊடகங்கள் அரசின் விளம்ரங்களின் வருவாயை எதிர்பார்ப்பதால், மோடியின் அரசு குறித்து அதிக விமர்சனங்கள் வைப்பதில்லை.

மோடியும், அமித் ஷாவுன் பொரும்பான்மை வகிக்கும் பாஜகவில், அவர்களுக்கு எதிராக எந்த தலைவரும் இல்லை.

மிகமுக்கியமாக, மக்களுக்கு நல்ல எதிர்பார்ப்பையும், நம்பிக்கைக்கான வித்தாக அமையக்கூடிய தலைவரையும் எதிரில் நிறுத்த தவறியது ஒழுங்கற்ற எதிர்கட்சி.

இருப்பினும், இன்னும் ஏதோ ஒன்று இருக்கதான் செய்கிறது என்கிறார், தி பிரிண்ட் நியூஸ் செய்தியின் ஆசிரியர் சேகர் குப்தா.

அதற்கு சரியான அறிகுறி, சமீபகாலமாக மோடியின் மிகவும் ஆக்ரோஷமான ஆதரவாளர்கள் கூட, சமூக தளங்களில் அடக்கமாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கமோ, பிரதமரை எள்ளி நகையாடும் வகையில், பலர் மீம்கள் போடுகின்றனர்.

மோதியின் அரசியல், அதிருப்தியை அளிக்கிறது. மாட்டிறைச்சி விற்பனை மற்றும் உண்ணுதல் விவகாரத்தில் இவர்களின் வெறித்தனம், இந்து கடும்போக்குவாதிகள் போன்றவர்களின் மூலம், பாஜக அரசு, கிராமவாசிகளையும், இளைஞர்களையும் பயமுறுத்தியுள்ளதாக நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதை இன்னும் மோசமாக்கும் விதத்தில், ஐந்தில் ஒரு பங்கு முஸ்லிம்கள் உள்ள உத்திரபிரதேச மாநிலத்திற்கு, முஸ்லிம்களுக்கு எதிரான சொற்போருக்கு பெயர்போன, சர்ச்சைக்குரிய இந்துமதத் தலைவரை முதல்வராக்கியுள்ளது மோடி அரசு.

சீர்திருத்தவாதியல்ல

2014 ஆம் ஆண்டு, அதிகப்படியான இளைஞர்களின் வாக்குகளை தன்வசமாக்கினார் மோடி. ஆனால், இளைஞர் சமூதாயத்தில் அவருக்கான ஆதரவு குறைகிறதா?

தில்லி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழக தேர்தல்களில், பாஜக ஆதரவு இளைஞர் குழுக்கள் தோல்வியுற்றுள்ளது.

மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள முன்னணி பல்கலைக்கழகத்தில், பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டிற்காக மாணவர்கள் போராடினர். போராட்டத்தில் பெண்களை காவல்துறையினர் தாக்கியது நிச்சயம் அவர் கட்சிக்கான இளம் வாக்காளர்களை மகிழ்ச்சிப்படுத்தாது.

பொருளாதாரத்தை பொறுத்தவரையில், தன் சக்தியை மீறி செயல்பட்டுள்ளார் என்றும், அவர் மீதுள்ள எதிர்பார்ப்புகளை அவரால் பூர்த்தி செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜூன் மாதம் தி எக்கனாமிஸ்ட் பத்திரிக்கை, எதிர்பார்த்த வகையிலான தீவிர சீர்திருத்தவாதியாக மோடி இல்லை என்று கூறியுள்ளது. மோடி, தன்னிடம் சில திட்டங்களை வைத்திருந்ததாகவும், ஜி.எஸ்.டி போன்றவை, முன்பு இருந்த காங்கிரஸ் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டவை என்றது.

ஜி.எஸ்.டி க்கு ஆதரவான பதாகை
Reuters
ஜி.எஸ்.டி க்கு ஆதரவான பதாகை

சமீபகாலத்தில், இந்தியாவின் மிக சக்திவாய்ந்த அரசை நடத்துவதை தவிர்த்து, நாட்டின் நிலம் மற்றும் மின்சார துறைகளில் செயல்படக்கூடிய சந்தையையும், தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தத்தையும் கொண்டு வந்துள்ளது மோடி அரசு என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மோடியின் அரசியலை பொருத்தவரையில், இந்துக்களின் வெற்றிகளை எண்ணமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தை முன்னெடுக்க கூடியவராக மோடியுள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பணத்தால் புரளக்கூடிய பங்குச்சதையை சீர்திருத்துவதன் மூலம், இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க, மோடிக்கு இன்னும் நேரம் இருப்பதாகவே பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

மாநில அரசால் நடத்தப்படும் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது பணத்தை அதிகரிப்பதுடன், சிக்கலில் உள்ள வங்கிகளுக்கு மீண்டும் மூலதனம் அளித்து உதவுவதன் மூலம், அவைகளால் மீண்டும் செயல்பட துவங்க முடியும்.

ரூபாயை பதிப்புகுறைப்பு செய்வது மூலம், ஏற்றுமதியை உயர்த்த முடியும், ஜி.எஸ்.டியை இன்னும் எளிமைபடுத்துவதால் சிறுவணிகர்களுக்கு உதவ முடிவ முடியும். வட்டிவிகிதத்தை குறைப்பதன் மூலம், வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்.

வளர்ச்சி என்பது சமூக நிலைத்தன்மையாலும் வரும் என்றாலும் கூட, அதை சீர்குலைக்கக் கூடியவர்களை மோடியால் இழுத்து நிறுத்த முடியுமா என்பதும் தெளிவாக தெரியவில்லை.

நூல் உற்பத்தி ஆலை
Reuters
நூல் உற்பத்தி ஆலை

போராடும் அரசியல்வாதி

எதுவாயினும், மோடி, பெரும்பலம் பொருந்திய போராளி. மோடிக்கு எதிராக அலைகள் திரும்புகிறது என்று உறுதியாக இப்போது கூற முடியாது.

ஆகஸ்டு மாதத்தில் நடந்த மக்கள் கருத்தெடுப்பில், தேர்தல் நடந்தால், மோடி கணிசமான வகையில் வெற்றிபெறுவார் என்றே முடிவுகள் வந்தது.

சி.எஸ்.டி.எஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், குஜராத்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல் சில தகவல்களை அளிக்கும் என்று கூறியுள்ளதோடு, ஜி.எஸ்.டியால் மக்கள் மகிழ்ச்சியற்று இருப்பதாக பரிந்துரைத்துள்ளது.

பாஜக தோற்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை ஆனால், வெற்றி விகிதம் கூர்மையாக கவனிக்கப்படும்.

தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில், மோடி இன்னும் கடுமையாக பணியாற்றக்கூடிய, உண்மையான பிரதமராகவே திகழ்கிறார்.

இந்த அதிருப்தி அலை பெரிய சூறாவளியாக மாறாமல் தடுத்தது இரண்டு விஷயங்களே. அவை, சக்திவாய்ந்த மாற்றுசக்தி இல்லாததும், மோடி மீதான தனிப்பட்ட நம்பகத்தன்மையுமே என்கிறார் அரசியல் ஆய்வாளர் சஞ்சய் குமார்.

தற்போதுள்ள ஒரே கேள்வி: இன்னும் எவ்வளவு காலம், மோடியால் தனது தனிப்பட்ட பிம்பம் மற்றும் நம்பகத்தன்மையின் மூலம் இந்த அலைகளை அடக்கிவைக்க முடியும்?

இதற்கான பதில்தான், தற்போது காற்றில் உள்ளது.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
While world economy is going on in the right path, Indian economy is struggling under the leadership of Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X