For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜைன மத துறவிகள் வாழ்க்கை அப்படி ஒன்றும் மிக எளிதானது அல்ல!

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    'இவர்களின்' துறவு இவ்வளவு கடினமானதா?-வீடியோ

    பாலிதானா: குழந்தையையும் ரூ100 கோடி சொத்துகளையும் விட்டுவிட்டு தம்பதி ஒருவர் ஜைன மத துறவிகளாகும் செய்திகள் ஊடகங்களில் தலைப்பு செய்திகளாகிக் கொண்டிருக்கின்றன. உண்மையில் ஜைன மத துறவறம் என்பது அப்படி ஒன்றும் மிக எளிதானது அல்ல... ஆதிகாலத்து துறவற நடைமுறைகளை அச்சு பிசகாமல் கடைபிடிக்கும் கடினமான ஒன்று இது.

    குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள சிறுநகரம் பாலிதான்.. பாலிதானாவில் அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா?

    இந்த சிறுநகரத்தில் பதியும் கால்கள் அனைத்தும் 3,000 படிக்கட்டுகளை கடந்து சென்று வழிபாடு நடத்தும் சத்ருஞ்சயா மலையை நோக்கித்தான் செல்கின்றன.

    மலைக்க வைக்கும் காட்சிகள்

    மலைக்க வைக்கும் காட்சிகள்

    அப்படி மலையை நெருங்க நெருங்க கண்ணில் தென்படும் காட்சிகள் முதன் முதலாக பார்ப்பவர்களை மலைக்க வைக்கும். இளம் பெண்கள் முதல் முதியோர் வரை வெள்ளை உடை அணிந்தும் கைகளில் தடி ஒன்றுடனுடன் ஒரேவிதமான பாத்திரத்துடனும் தெருவெங்கும் நம்மை கடந்து செல்வர்.

    3,745 படிகள்...

    3,745 படிகள்...

    அதேபோல் அனாசயமாக 3,745 படிக்கட்டுகளை விறுவிறுவென ஏறி இறங்கும் இந்த வெள்ளை உடை நபர்களையும் நாம் பார்க்க முடியும். யார் இவர்கள்? இவர்கள்தான் ஜைன துறவிகள்..

    தனித்தனி மடங்கள்

    தனித்தனி மடங்கள்

    ஜைன துறவிகளின் மடங்களுக்குள் அவ்வளவு எளிதாக சென்றுவிட முடியாது. ஆண், பெண் இருபாலருக்கும் பாலிதானாவில் தனித்தனியே ஆசிரமங்கள் உள்ளன.

    பெண்கள் துறவறம் கடினமானது

    பெண்கள் துறவறம் கடினமானது

    இந்த துறவிகள்தான் ஜைனமதத்தின் போற்றுதலுக்குரியவர்கள். ஆண் துறவிகள் நிர்வாண நிலையில் வலம் வந்தாலும் அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள். பெண்களில் துறவற வாழ்க்கை மிகவும் கடினமனாது.

    <strong> </strong>குழந்தையையும் பல கோடி சொத்துக்களையும் கைவிட்டு துறவறம் பூண்ட ஜெயின் தம்பதி! குழந்தையையும் பல கோடி சொத்துக்களையும் கைவிட்டு துறவறம் பூண்ட ஜெயின் தம்பதி!

    மண் பாத்திரங்கள்..

    மண் பாத்திரங்கள்..

    இவர்கள் தங்கும் இடங்களில் மண் பாத்திரங்கள் அல்லது ஒருவகையான பீங்கான் பாத்திரங்கள் ஒரே மாதிரியாக கொடுக்கப்பட்டிருக்கும். வெள்ளை உடைதான் அணிய வேண்டும். செருப்பு அணிய கூடாது.

    பிரத்யேக சாப்பாடு

    பிரத்யேக சாப்பாடு

    மூன்று வேளையும் இவர்களுக்கென பிரத்யேகமாக பொது இடம் ஒன்றில் தயாரிக்கப்படும் ஒன்றில்தான் போய் சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட வேண்டும். துறவறத்தைப் பாதிக்காத உணவுகள் பாலிதானாவில் பிரத்யேகமாக இவர்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படும்.

    கையால் பிடுங்கப்படும் தலை முடி

    கையால் பிடுங்கப்படும் தலை முடி

    அதேபோல் இவர்களது தலைமுடியை ஆதிகாலத்து நடைமுறைப்படி இயற்கை முறைப்படி கையிலால் பிடுங்கிவிடுகின்றனர். நீண்ட கூந்தலுடன் எவரும் இருப்பதில்லை. ஆண்களுடன் பேசுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    சத்ருஞ்சயா

    சத்ருஞ்சயா

    இவற்றையெல்லாம் விட காலையிலும் மாலையிலும் ஜைனர்களின் புனிதத் தலமான சத்ருஞ்சயா மலைக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும். ஆம் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் 3,000 படிக்கட்டுகளை கடந்து போய் வழிபாடு நடத்திவிட்டுதான் வருகிறார்கள் அத்தனை துறவிகளும்.

    உச்சிமலையில் ஆயிரம் கோவில்கள்

    உச்சிமலையில் ஆயிரம் கோவில்கள்

    இந்த 3,745 படிக்கட்டுகளைக் கடக்கும் வரையில் கோவில்கள் எதுவும் இல்லை. ஆனால் 3,745 படிக்கட்டுகளை கடந்து மேலே சென்றால் ஆச்சரியத்தில் உறைந்து போய்விடுவோம். அந்த மலை உச்சியில் ஆயிரக்கணக்கான சிறியதும் பெரியதுமான ஜைன கோவில்கள் பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டுக் கொண்டே வருகின்றன. இத்தனை ஆயிரம் படிக்கட்டுகளைக் கடந்து எப்படித்தான் இத்தனை கோவில்களைக் கட்டினார்கள் என வியந்து போவோம்.

    இந்துக்களுக்கு காசி எப்படியோ அப்படித்தான் ஜைனர்களுக்கு இந்த பாலிதானா!

    English summary
    Here the story of Jain's holy place Palitana in Gujarat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X